← Back to list
கூட்ட நெரிசல் குறித்து KTMB விளக்கம்!
May 07, 2020
கடந்த திங்கட்கிழமை Port Klangங்கில் இருந்து பேரா, Tanjung Malim வழித்தடத்திற்கான KTM Komuter ரயிலில் கூட்ட நெரிசலாக இருந்தது குறித்து KTM நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
உண்மையில் 6 பெட்டிகளைக் கொண்ட ரயிலைப் பயன்படுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3 பெட்டிகள் கொண்ட ரயிலைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டதாக அது விளக்கியது.
அதன் காரணமாகத்தான், கூடல் இடைவெளிக்கான அடையாளம் இட்டிருந்தும், நெரிசலைத் தவிக்க முடியாமல் போய் விட்டதாகவும் அது தெரிவித்தது.
முன்னதாக அந்த ரயிலில் அதிகமானோர் பயணித்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியிருந்தது.
Gerak Malaysia செயலி வாயிலாக விண்ணப்பித்தவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சொந்த ஊர்களில் இருந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே உரிய தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுமாறு PLUS வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.
Tol சாவடிகளில் தொகை அதிகரிப்பு செய்யும் சேவை இல்லாததால், தங்களது Touch N’ Go அட்டைகளில் போதுமான தொகை இருப்பதையும் உறுதிச் செய்து கொள்ளுமாறு அது ஆலோசனை கூறியது.
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல விரைவு பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை.
அது ஏற்கனவே இறுதிச் செய்யப்பட்டு விட்ட விஷயம் என PDRM தெரிவித்தது.
Gerak Malaysia செயலி மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றவர்கள் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சொந்த ஊர்களில் இருந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்புகின்றனர்.
இந்நிலையில் PDRM அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனிடையே, ஒரு வாகனத்தில் நான்கு பேர் வரை செல்லலாம்; ஆனாலும் அது PDRMமின் இணக்கத்தைப் பொருத்ததாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நெடுகிலும் நாடு முழுவதும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
குற்றச் செயல்களின் எண்ணிக்கை சுமார் 50 விழுக்காடு சரிந்துள்ளதாக PDRM தெரிவித்தது.
KL, Jalan Ampangங்கில் கட்டுமானத் தளப் பகுதியொன்றில் Covid-19 பரிசோதனைக்குப் பின் தப்பியோடிய 145 அந்நியத் தொழிலாளர்களில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு விட்டதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.
மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
உலகம் முழுவதும் Covid-19னுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 63 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மிக அதிகமாக அமெரிக்காவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather