← Back to list
மேலும் அதிகமானோர் பூரண நலமடைந்துள்ளனர்!
May 06, 2020
நாட்டில் மேலும் 135 பேர் Covid-19னில் இருந்து பூரண நலமடைந்துள்ளனர்.
புதிய சம்பவங்களைக் காட்டிலும் அவ்வெண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.
புதிதாக 45 சம்பவங்கள் பதிவாகி மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகப் பதிவாகும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCOவின் கீழ் புதிய வழமைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
"Mengamalkan norma-norma baru, dalam kehidupan, KKM akan terus memantau perkembangan jangkitan covid 19, melalui segala maklumat dan akan dimaklumkan dari masa ke masa"
பொது-தனியார் உயர்க்கல்விக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை அவர்களின் குடும்பத்தார் இன்று தொடங்கி உயர்க்கல்விக் கழக வளாகங்களில் இருந்து அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆயினும் அது மாநில அளவில் மட்டுமே.
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியாது என உயர்க்கல்வி அமைச்சு விளக்கியது.
ஏறக்குறைய ஈராயிரத்து 900க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக் கழக மாணவர்கள் இன்று தத்தம் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.
தீபகற்பத்தில் இருந்து சபா, சரவாக் மற்றும் அங்கிருந்து தீபகற்பத்திற்கும் மாணவர்கள் திரும்புகின்றனர்.
கூடிய விரைவில் இந்தோனேசியாவில் இருந்து KLIAவுக்கு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
தற்போதைக்கு நாட்டின் எல்லைப் பகுதிகள் அந்நிய நாட்டவர்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அது தெளிவுபடுத்தியது.
கோலாலம்பூரில் தனிமைப்படுத்தி வைக்கும் மையமொன்றில் இருந்து அந்நிய நாட்டவர்கள் சிலர் தப்பியோடியிருப்பதை அடுத்து, அதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOP மறு ஆய்வு செய்யப்படவுள்ளது.
அவ்வாறு நிகழ்வது இது முதல் முறையல்ல எனக் குறிப்பிட்ட தற்காப்பு அமைச்சு, சம்பந்தப்பட்டவர்களைக் காவல் துறை தேடி வருவதாகக் கூறியது.
நாட்டில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி சிவப்பு மண்டலப் பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை பத்தாகவே இருக்கின்றன.
அம்மாவட்டங்கள் சிலாங்கூர், KL, ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேரா, பினாங்கு ஆகிய மாநிலங்களில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather