Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அன்னையர் தின வாழ்த்துகள்!

May 08, 2020


அன்னையர் தினம் நெருங்கி விட்டது!

எப்போதும் போல் அல்லாமல், இவ்வாண்டு COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு மத்தியில் இந்த அன்னையர் தினக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் சற்று மாறுப்பட்டே அமையவுள்ளது.

குறிப்பாக கொரோனா கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் நேரடிப் பணியில் இறங்கியுள்ள முன்வரிசைப் பணியாளரான தமக்கு இது  முற்றிலும் மாறுப்பட்ட அனுபவத்தை கொடுக்கப் போவதாக கூறுகின்றார், சிலாங்கூர் பந்திங் சுகாதார கிளினிக்கைச் சேர்ந்த மருத்துவர் இமெல்டா தேவதாஸ்.

மருத்துவர் இமெல்டா தேவதாஸ்

நான் திருமணமாகி சிலாங்கூரில் வசிக்கின்றேன். என் பெற்றோர்கள் நெகிரி செம்பிலானில் வசிக்கின்றனர். வழக்கமாக, மாதத்தில் குறைந்தப்பட்சம் மூன்று முறையாவது என் அம்மாவை நேரில் சென்று பார்த்து வருவேன். ஆனால் இப்போது என் தாயாரைப் பார்த்து ஏறக்குறைய 3 மாதங்களாகி விட்டன. பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாக உண்டு. இருந்த போதிலும், MCO காரணத்தினாலும், தினமும் சுகாதார கிளினிக்கில் COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனை (screening) பணிகளை மேற்கொண்டு வருவதாலும், தற்போதைக்கு நான் அம்மா வீட்டிற்குச் செல்வதில்லை. வழக்கமாக, அன்னையர் தினம் என்றாலே, வீட்டில் உடன் பிறப்புகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிறு விழாவுக்கு ஏற்பாடு செய்வோம். ஆனால், அதற்கும் இம்முறை வாய்ப்பில்லை. இருந்த போதிலும், கூடல் இடைவெளி கருதி, இம்முறை அம்மாவை நேரில் சென்று பார்க்காமல் இருப்பது தான் ஒரு மருத்துவப் பணியாளாராக நான் என் அம்மாவுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என நான் கருதுகிறேன்என மருத்துவர் இமெல்டா தெரிவித்தார்.

மருத்துவர் இமெல்டா தனது தாயார் திருமதி தேவி முத்தம்மாவுடன்...

 

 

இவ்வேளையில், Pandamaran சுகாதார கிளினிக்கைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ் பத்துமலை கூறுகையில்,

மருத்துவர் லோகேஸ் பத்துமலை

நான் இந்த சுகாதார கிளினிக்கில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் முன்வரிசை மருத்துவப் பணியாளாராக பணிப் புரிகின்றேன். அதனால், என்னை நானே தனிமைப்படுத்தியும் கொண்டுள்ளேன். இதன் காரணமாக, இவ்வாண்டு அன்னையர் தினக் கொண்டாட்டம் எனக்கு சற்று மாறுப்பட்டே இருக்கும். வழக்கம் போல், அம்மாவை நேரில் சென்று சந்திக்கவோ, அல்லது அவரை அன்பாக கட்டிப்பிடிக்கவோ முடியாது. COVID-19 கிருமித் தொற்றின் சீற்றம் தணிந்தப் பிறகு, அம்மாவுக்காக சிறப்பு கொண்டாட்டத்தை நடத்த நான் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

மருத்துவர் லோகேஸ் தனது தாயார் திருமதி பஞ்சவர்ணத்துடன்....

 

 

மற்றொரு நிலவரத்தில்தலைநகரிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த தாதியான லோகேஸ்வரி தங்கராஜூ விரைவில் நிலைமை சீரடைந்து, தனது அம்மாவை நேரில் சென்று காண வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தாதி லோகேஸ்வரி தனது தாயார் திருமதி சரஸ்வதியுடன்....

என்னுடைய அம்மா மலாக்காவில் இருக்கின்றார். அவரை நேரில் சென்று சந்தித்து ஏறக்குறைய ஐந்து மாதங்களாகி விட்டன. ஒவ்வோர் ஆண்டும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், அன்னையர் தினத்திற்கு கண்டிப்பாக அம்மா வீட்டுக்குச் சென்று விடுவேன். என் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து அம்மாவுக்காக சிறப்பான கொண்டாட்டத்தையும் திட்டமிட்டு செய்வோம். ஆனால், இவ்வாண்டு அதற்கு வாய்ப்பில்லை. முன்வரிசைப் பணியாளராக இருப்பதால், நான் என் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன். என் அம்மாவை நேரில் சந்திக்கும் தருணத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கின்றேன்என, இரண்டு குழந்தைகளுக்கு தாயுமான லோகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலை சற்று சவால் தான் என்றாலும், இத்தியாகங்களுக்கான அவசியத்தை தாங்கள் உணர்ந்திருப்பதாக மருத்துவப் பணியாளர்களான அம்மூவரும் ராகா செய்தியிடம் தெரிவித்தனர்.

நிறைவாக, இரவுப் பகல் பாராமல், முன்வரிசைப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ராகா செய்தியின் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!   

 

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே!

நேர்காணல் & தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather