← Back to list
வழக்கத்திற்கு மாறானது அல்ல!
May 06, 2020
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு பரிசோதனை!
COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, KL மற்றும் சிலாங்கூரில் அக்கிருமித் தொற்று அதிகம் பதிவாகி சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைக்கப்படுவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
“so we look into locality, and also we look into the high-risk group. We know that our high-risk group from the Sri Petaling gathering, from tahfiz school. Our policy now is to make sure that we screen them. We will look into the target in terms of the locality and if we can actually identify them, we will screen them. We encourage employers for example to do screening for the foreign workers.”
நேற்றுப் பதிவான 30 புதிய சம்பவங்களில் 24 பேர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டாத்.
இதையடுத்து, அத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 383ஆக அதிகரித்துள்ளது.
நடைமுறைக்கு ஒத்து வராது!
நாட்டிலுள்ள அனைத்து அந்நிய நாட்டுத் தொழிலாளர்களையும் கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்துவது, நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் கூறியிருக்கின்றார்.
குறுகிய காலத்தில் பேரளவிலான கிருமித் தொற்று மாதிரிகளைப் பரிசோதிக்க அமைச்சின் ஆய்வுக் கூடங்கள் போதுமானதாக இருக்காது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அந்நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புதிய வழமைகள் மற்றும் தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்வது உள்ளிட்டவை நீண்ட கால தீர்வாக அமையும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
முகவரியை மறு உறுதிப்படுத்துங்கள்!
நாளை தொடங்கி மே 10ஆம் தேதி வரை, சொந்த ஊர்களில் இருந்து வேலையிடங்களுக்கு பயணிக்கவிருப்பவர்கள், Gerak Malaysia செயலி வழி தங்களது முகவரியை மறு உறுதிப்படுத்த வேண்டும்.
அல்லது காவல் துறையின் அதிகாராப்பூர்வ Facebook பக்கத்தில் இருந்து MCO பயண பெர்மிட்டுக்கான பாரத்தை பதிவிறக்கம் செய்யலாம்;
அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களுக்குச் சென்றும் பாரத்தை நிரப்பலாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சாலை தடுப்புச் சோதனையில் ஈடுப்பட்டுள்ள காவல் துறையினருக்கு, அச்செயலி வாயிலாக அத்தகவல்கள் நேரடியாக கிடைத்து விடும் என்பதால், மக்கள், காவல் துறையின் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
மாநிலங்களுக்கிடையே பயணிக்க, காவல் துறை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது; 13 லட்சம் முறை அச்செயலி பதிவிறக்கப்பட்டுள்ளது.
CMCO-வை அமுல்படுத்த இணக்கம்!
ஆகக் கடைசியாக, Kedah-வும், Kelantan-னும் தத்தம் மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வை அமுல்படுத்த இணங்கியுள்ளன.
இதனிடையே, இந்த CMCO காலக்கட்டத்தில் பெர்லீஸ் மாநிலத்திற்குள் நுழைபவர்கள், 14 நாட்களுக்கு மையமொன்றில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநில MB கூறியுள்ளார்.
வழக்கத்திற்கு மாறானது அல்ல!
CMCO அமுலுக்கு வந்த முதல் நாளே நாட்டிலுள்ள பெரும்பாலான அடகுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல என, மலேசிய அடகுக்கடை நடத்துநர்கள் சங்கம் கூறியுள்ளது.
சிலர் அடகு வைத்த நகைகளை மீட்கவும், வட்டி செலுத்தவும், சிலர் அடமானத்திற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்குமே அக்கடைகளில் குழுமியதாக அச்சங்கம் தெரிவித்தது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather