← Back to list
கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை!
May 02, 2020
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள இக்காலக்கட்டத்தில், கள்ளக் குடியேறிகளை கைது செய்யும் பேரளவிலான நடவடிக்கையை PDRM முடுக்கி விட்டுள்ளது.
நாட்டில் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador கூறினார்.
சரியானப் பயணப் பத்திரங்களை கொண்டிருக்காத கள்ளக் குடியேறிகள் மத்தியில் ஒருவேளை COVID-19 பரவினால், அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது சிரமமாகி விடும் என்றாரவர்.
அவ்வாறு கைது செய்யப்படும் கள்ளக் குடியேறிகள் MCO முடியும் வரை அமுலாக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார்கள்.
MCO முடிந்தப் பிறகு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது பற்றி முடிவெடுக்கப்படும் என சொன்னார்.
இதனிடையே, வரும் திங்கட்கிழமை, மே 4ஆம் தேதி தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்திருப்பது, பொது மக்கள் தங்கள் விருப்பம் போல் வெளியே நடமாடலாம் என அர்த்தமாகாது.
IGP அந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
நாட்டில் COVID-19 கோறனி நச்சில் தொற்று இன்னும் முழுமையாக தணியவில்லை; எனவே, பொது மக்கள் பொறுமைக் காக்க வேண்டும்.
வீட்டில் இருந்து வெளியேறும் முன், அது அவசியமான பயணமா அல்லது காரியமா என்பதையும் மக்கள் பரிசீலித்து செயல்பட வேண்டும் என IGP அறிவுறுத்தினார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் செயல்படும்!
திங்கட்கிழமை தொடங்கி, அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுப் போக்குவரத்து துறைச் சார்ந்தவர்கள் மற்றும் பயணிகள் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள வழிக்காட்டியை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்படுகின்றனர்.
மோசடிகள் குறித்து கவனம் தேவை!
அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஒத்திருக்கும் சில போலி அகப்பக்கங்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து கவனமுடன் இருக்குமாறு, மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் FOMCA, பொது மக்களை எச்சரித்துள்ளது.
எனவே, குறுஞ்செய்தி, தொலைப்பேசி அழைப்பு மற்றும் மின்னஞ்சல் வழி வரும் தகவல்களை நன்றாக சரிப்பாக்குமாறும் மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் உத்தரவு நீட்டிப்பு!
இந்தியாவில் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக, மே 4ஆம் தேதியில் இருந்து மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது.
அதே சமயம், இந்தியா முழுவதும் கொரோனா சம்பவங்கள் அதிகம் பதிவாகிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather