← Back to list
மே 4 முதல் MCO தளர்த்தப்படுகிறது!
May 01, 2020
பிரதமரின் தொழிலாளர் தின சிறப்புரை!
இன்று நாட்டில் தொழிலாளர் தினக் கொண்டாட்டம் வழக்கம் போல் இல்லை என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அரசாங்கம் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளது.
தொழிலாளர் தின சிறப்புரையில் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இதனை தெரிவித்தார்.
இவ்வேளையில், மே நான்காம் தேதி தொடங்கி பெரும்பாலான தொழில்துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவித்த பிரதமர், எனினும், அது நிபந்தனைக்குட்பட்டு மேற்கொள்ளப்படும் என்றார்.
நாட்டில் தற்போது கொரோனா சம்பவங்கள் அறவே இல்லாத பச்சை மண்டலப் பகுதிகள் அதிகரித்துள்ளன;
அதன் எண்ணிக்கையை அதிகரிக்க மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்; சம்பவங்கள் குறைந்துள்ளன என்பதற்காக யாரும் மெத்தனமாக இருந்து விடக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இப்போதைக்கு பயணங்கள் வேண்டாம்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO பின்னர் மீட்டுக் கொள்ளப்படும் போதும், தேவையற்ற உள்ளூர் – வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்குமாறு, மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொரோனா நச்சில் தொற்றை கட்டுப்படுத்த பயணத் தடை மிகப் பெரிய பங்காற்றியிருப்பதை சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், 21 ஆயிரத்திற்கும் அதிகமான அந்நிய நாட்டவர்களுக்கு கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அவர்களில் ஏறக்குறைய 811 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக Dr Noor Hisham தெரிவித்துள்ளார்.
MTUC பரிந்துரை!
COVID-19 கிருமித் தொற்றுக் காரணமாக, தொழிலாளர்கள் வேலை நீக்கப்படுவதை தடுக்கும் விதிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும் என, மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ், அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.
பொறுப்பற்ற சில முதலாளிமார்களிடம் இருந்து தொழிலார்களை பாதுகாக்க அது அவசியமாவதாக MTUC பொதுச் செயலாளார் J சோலமன் தெரிவித்தார்.
காவல் துறையின் அறிவுரை!
உணவு மற்றும் பொருள் விநியோகிப்புச் சேவையில் ஈடுப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள், சாலைகளில் வேகக் கட்டுப்பாடு உள்ளிட்ட இதர விதிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
அதுவும் மழைக்காலமாக உள்ள இச்சமயத்தில், விபத்துகளை தவிர்க்க இது அவசியமாவதாக KL போக்குவரத்து துறை காவல் துறை தெரிவித்தது.
இந்த MCO காலக்கட்டத்தில், அந்த மோட்டார் சைக்கிளோட்டிகளை உட்படுத்திய விபத்துகள் குறித்து அத்துறைப் பேசியது.
நீல வண்ண விளக்குகள்!
கொரோனா கிருமித் தொற்றை கட்டுப்படுத்த போராடும் முன்வரிசைப் பணியாளார்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி கூறும் விதமாக, KL, Putrajaya மற்றும் Labuan-னில் உள்ள சில கட்டங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் நேற்றிரவு நீல வண்ண விளக்குகள் எரிய விடப்பட்டன.
இம்முயற்சி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்; KL கோபுரம், Petronas இரட்டைக் கோபுரம், Istana Negara மற்றும் Masjid Jamek ஆகியவற்றை இது உட்படுத்தியிருக்கும்.
ஒன்றுகூடுதல் இல்லை!
COVID-19 காரணமாக, இவ்வாண்டு விசாகத் தின ஒன்றுக்கூடுதல்கள் நடைபெறாது என, மலேசிய பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் இணையம் வழி மேற்கொள்ளப்படும் என்றும் அச்சங்கம் கூறியது.
தொகுப்பு:சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather