← Back to list
IPT மாணவர்கள் இன்று புறப்படுகின்றனர்!
Apr 27, 2020
நாட்டில் மேலும் 95 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டு பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக 40 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 5,820 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒருவர் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் Covid-19 சம்பவங்கள் அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆகவே இருக்கிறது.
அம்மாவட்டங்கள், KL, சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் உள்நாட்டு உயர்க்கல்விக் கழகங்களில் சிக்கிக் கொண்ட மாணவர்களில் முதல் குழுவினராக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்கு இன்றிரவு புறப்படுகின்றனர்.
மத்தியப் பகுதியிலிருந்து வடக்கு மற்றும் வடப் பகுதியில் இருந்து மத்தியப் பகுதிக்கு என 9 பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயணிக்கின்றனர்.
மாணவர்கள் தத்தம் சொந்த ஊர்களைச் சென்றடைந்ததும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
வீட்டில் இருந்து யாரும் வர இயலாத பட்சத்தில், மாணவர்களை முன் வரிசைப் பணியாளர்கள் வீடு கொண்டுச் சேர்ப்பர் என தற்காப்பு அமைச்சு கூறியது.
சபா, சரவாக்கைச் சேர்ந்த மாணவர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மே முதல் தேதி தொடங்கும்.
ஜொகூர், Simpang Renggamமில் அமலில் இருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளையுடன் முடிவடைகிறது.
மாறாக சிலாங்கூர், Sungai Luiயில் EMCO மேலும் ஒரு வாரத்திற்கு மே ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
MCO காலக் கட்டத்தில் ரத்த தானம் செய்ய விரும்புவோர் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மருத்துவமனைகள் அல்லது சுகாதார கிளினிக்குகளுக்குச் சென்று அவ்வாறு செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.
தேசிய ரத்த வங்கியில் ரத்த கையிருப்பு 33 விழுக்காடு குறைந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பரிவுமிக்க உதவித் திட்டத்திற்கு புதிய விண்ணப்பங்களை அனுப்பவும் மேல் முறையீடு செய்யவும் இறுதி நாள் இம்மாதம் 30 ஆம் தேதியாகும்.
இணையம் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என உள்நாட்டு வருவாய் வாரியம் LHDN தெரிவித்தது.
வர்த்தக வாகனங்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள சாலை போக்குவரத்துத் துறையின் சேவை முகப்புகள் வரும் புதன்கிழமை இருந்து இயங்கவுள்ளன.
இருப்பினும் அச்சேவைகள் தனிநபர் வாகனங்கள், டெக்சி, e-hailing ஆகியவற்றுக்கு அல்ல என JPJ தெளிவுபடுத்தியது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather