Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முயற்சிகள் தொடர்ந்து பலனளித்து வருகின்றன!

Apr 27, 2020


தொடர்ந்து கை மேல் பலன்!

COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்தும் மலேசியாவின் முயற்சிகளுக்கு தொடர்ந்து பலன் கிடைத்து வருகின்றது.

நேற்று நாட்டில் 38 பேர் மட்டுமே அக்கிருமித் தொற்றுக்கு ஆளான வேளை, நூறுப் பேர் குணமடைந்திருப்பதை, சுகாதார துறை தலைமை இயக்குநர் சுட்டிக் காட்டினார்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மொத்த சம்பவங்களில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 66.8 விழுக்காடு என்றும் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

நேற்று மரணம் நிகழவில்லை.

"Gerak Malaysia" செயலி!

நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணை MCO அமுலில் உள்ள இக்காலக்கட்டத்தில், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய "Gerak Malaysia" செயலி வழி, 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிந்துக் கொண்டுள்ளனர்.

அதில் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக Bukit Aman தெரிவித்தது.

அப்பயணங்களுக்கான அட்டவணை குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

உயர்கல்வி கழக மாணவர்கள் இன்று வீடு திரும்புகின்றனர்!

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்க் கல்விக் கழகங்களில் தங்கியிருந்த மாணவர்கள் இன்று தொடங்கி, கட்டம் கட்டாமக் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும், Covid-19 தொற்று அல்லாத பச்சை மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு அந்த அனுமதி வழங்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது. 

இவ்வேளையில், இதுநாள் வரை MCO-வுக்கு கட்டுப்பட்டு, தத்தம் பல்கலைக்கழக வளாகங்களிலேயே இருந்த மாணவர்களை மலேசிய மருத்துவச் சங்கம் பாரட்டியிருக்கின்றது.

தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்ந்து MCO-வை பின்பற்றுவார்கள் என்பதே தமது எதிர்பார்ப்பு என சங்கத் தலைவர் DR N ஞானபாஸ்கரன் கூறியுள்ளார்.

பெற்றோர்களுடன் செலவிடக் கிடைத்த நேரத்தையும், காலத்தையும் மாணவர்கள் பயனுள்ளதாக்கிக் கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்!

நாளொன்றுக்கு 400 மலேசியர்கள் மட்டுமே சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்ப அனுமதி உண்டு என தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரிலுள்ள மலேசிய உயர் ஆணையத்தில் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இரு சந்தைகள் மூடப்பட்டன!

PJ-வில் Taman Megah-விலும், நெகிரி செம்பிலான் Bahau-விலும் உள்ள பொதுச் சந்தைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

அச்சந்தைகளைச் சேர்ந்த இரு வியாபாரிகளுக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதே அதற்கு காரணம் என Dr Noor Hisham சொன்னார்

அமுலாக்கப் பணிகள் சீராக நடைபெறுகின்றன!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான KL, Pusat Bandar Utara மற்றும் KL மொத்த வியாபார சந்தை சுற்று வட்டாரப் பகுதியில்  அமுலாக்கப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொண்டுள்ள அப்பகுதியில், அவசர உதவிகள் வழங்குவதற்கான சேவைகளும் தயார் நிலையில் இருப்பதாக செந்தூல் மாவட்ட காவல் துறைத் தலைவர்  ACP எஸ். சண்முகமூர்த்தி சின்னையா தெரிவித்துள்ளார்.

அன்றாடம் காணப்படும் பிரச்னைகளுக்கு பல்வேறு தரப்புகள் வாயிலாக உடனடி தீர்வுக் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

COVID-19 கிருமித் தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடி வரும் இவ்வேளையில், பொய்த் தகவல்கள் பகிரப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் ACP எஸ். சண்முகமூர்த்தி வலியுறுத்தினார்.

இந்தியா நிலவரம்!

இந்தியாவில் இதுவரை 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள வேளை, இதுவரை 825 பேர் உயிரிழந்துள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather