Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நோன்பு தொடங்கியது!

Apr 24, 2020


முஸ்லீம் அன்பர்கள் இன்று தங்களது நோன்பு மாதத்தை தொடங்கியுள்ளனர்.

அவ்வகையில், இம்முறை அவர்களில் சிலரது நோன்பு தயாரிப்புகள் குறித்து ராகா செய்தி கேட்டறிந்தது.

அதன் தொடர்பில் நம்மிடம் பேசிய ஜொகூரைச் சேர்ந்த Muhammad Hakim Bin Abdullah, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலில் இருப்பதால், இவ்வாண்டுக்கான நோன்பு வழக்கம் போல் இல்லை என தெரிவித்தார்.

Muhammad Hakim Bin Abdullah

 

ஆனாலும், அதனை தாம் ஒரு தடையாக கருதவில்லை; அதுவும் ஒரு வகையில் தமக்கு பயனளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். ஒவ்வோர் ஆண்டு நோன்பின் போதும் வழக்கமாக காலையில் எழுந்து sahur முடித்து, தொழுகையும் வைத்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று விடுவேன். வீடு திரும்ப சில சமயங்களில் நள்ளிரவு கூட ஆகி விடும். இதனால், நோன்பினை சிங்கப்பூரிலேயே திறப்பேன். ஆனால், இம்முறை இந்த MCO காரணமாக எந்த நிலை மாறுப்பட்டிருக்கின்றது.என மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்பமாக நோன்பினை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை நான் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்என்றார்.

இன்று அதிகாலையில் Muhammad Hakim தனது குடும்பத்தாருடன்....

இந்த ரமலான் மாதத்தில் முஸ்லீம் அன்பர்கள் இயன்றவரை சிக்கனத்தை கடைப்பிடிப்பார்கள் என்ற தமது எதிர்பார்ப்பையும் அவர் வெளியிட்டார்.

இவ்வேளையில், ரமலான் மாதத்தின் சிறப்பே, முதல் நாள் நோன்பினை குடும்பத்துடன் சேர்ந்து தொடங்குவது தான்.

ஆனால், இம்முறை தனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை; MCO-வுக்கு கட்டுப்பட்டு தனது சொந்த ஊரான ஜொகூருக்கு திரும்பவில்லை என கூறிய PJ-வைச் சேர்ந்த Kamal Bin Hassan வழக்கமாக தனது நோன்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விவரித்தார்.

Kamal Bin Hassan

 

"நானும் என் உடன் பிறந்தவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் பணிப் புரிகின்றோம். ஒவ்வோர் ஆண்டும் நோன்பு மாதத்தின் முதல் நாள் நாங்கள் எங்கிருந்தாலும், சொந்த வீட்டுக்கு திரும்பி விடுவோம். எங்களுக்காக அப்பாவும், அம்மாவும் காத்திருப்பார்கள். ஆனால் இம்முறை அது முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும், நோன்பு முதல் நாளில் அனைவரும் வீட்டில் கூடியிருப்போம். அம்மா எங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்திருப்பார். அப்பா ரமலான் சந்தையில் இருந்தும் உணவுகள் வாங்கி வருவோர். அனைவரும் ஒன்றாக தொழுது விட்டு, நோன்பினைத் திறப்போம். பிறகு மீண்டும் தொழுகையில் ஈடுபடுவோம்என தெரிவித்தார்.

அவரைப் போலவே, சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் Ampang-கைச் சேர்ந்த Fatima Jamal Sandairan தனது இன்றைய முதல் நாள் நோன்பு தொடங்கிய விதம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

Fatima Jamal Sandairan

 

"நான் தலைநகரில் தனியாக தான் தங்கியுள்ளேன். MCO-வினால் பெற்றோர் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. ஓர் ஆள் என்பதால், இன்று காலை Sahur-ருக்கு இரு அவித்த முட்டைகள் மற்றும் ஒரு குவளை காப்பி என எனது நோன்பு தொடங்குதலை சிக்கனமாக வைத்துக் கொண்டேன். இந்த முதல் நாள் போலவே இனி வரும் ஒவ்வொரு நாட்களையும் விவேகமாக அனுசரிக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்றார்.

COVID-19 கிருமிப் பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ரமலான் சந்தைகளும், பள்ளிவாசல்களில் Terawih  தொழுகைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

An article by: Sauriyammal Rayappan


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather