Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சொந்த ஊர்களுக்குத் திரும்ப மாணவர்களுக்கு அனுமதி!

Apr 24, 2020


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் மே 12 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதை சுகாதார அமைச்சு வரவேற்றுள்ளது.

Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த தங்களுக்கு ஓர் உதவியாக அது அமைந்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

இதனிடையே இன்று 121 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களையும் சேர்த்து இதுவரை மூவாயிரத்து 600க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர்.

புதிதாக 88 சம்பவங்கள் பதிவாகி மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

MCOவைத் தொடர்ந்து நாட்டிலுள்ள உயர்க்கல்விக் கழக வளாகங்களில் சிக்கிக் கொண்ட மாணவர்கள் வரும் திங்கட்கிழமை தொடங்கி சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். 

ஆயினும் பச்சைப் பகுதிகள் பட்டியலில் உள்ள இடங்களில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்படுவர் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார். 

அவர்கள் இரவு 9 மணியில் இருந்து காலை 9 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும்.    

மேல் விவரங்களை உயர்க்கல்வி அமைச்சு அறிவிக்கும்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தாலும், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் தடுப்பூசி போடும் சுகாதார வசதிகள் வழக்கம் போல் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

கொடுக்கப்பட்ட தேதியில் அல்லாமல் தாமதமாகத் தடுப்பூசி போட்டால், அது குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடலாம் என அது எச்சரித்தது.

ஜொகூரில் இரு முக்கிய அனைத்துலக நுழைவாயில்களில் மக்கள் நுழைவது, வெளியேறுவது தொடர்பில் புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOP நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் Covid-19 பரிசோதனை செல்லாது.

அதோடு அம்மருத்துவ விவரங்களும் அடிப்படைக் குறிப்பாக எடுத்துக் கொள்ளப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

KL, Selayang மொத்த வியாபாரச் சந்தை இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக அச்சந்தை இதற்கு முன் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

KLCCயில் புதிய Covid-19 சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தாங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி பரவியுள்ள மின்னஞ்சல் செய்தியை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. 

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வரை தங்களது ரயில் சேவைகள் தற்காலிகமாக இருக்காது என ERL கூறியிருக்கிறது.

MCO முடிவடைய குறைந்து மூன்று நாட்களுக்கு முன் KLIA express அகப்பக்கத்தில் புதிய அட்டவணை இருக்கும் என அது அறிக்கை வழி தெரிவித்தது.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95, RON97 பெட்ரோல் விலை நிலை நிறுத்தப்படுகிறது.

அவ்வகையில் RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 25 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 55 சென்னுக்கும் விற்கப்படும்.

டீசல் 3 சென் சரிந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 40 சென்னாகிறது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather