Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO நீட்டிப்பு!

Apr 24, 2020


MCO நீட்டிப்பு!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO நீட்டிக்கப்படுகிறது.

COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அமுலில் உள்ள மூன்றாம் கட்ட MCO ஏப்ரல் 28ஆம் தேதி முடிவடைகின்றது.

இதையடுத்து, ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மேலும் இரு வாரங்களுக்கு அதாவது  மே 12ஆம் தேதி வரை MCO நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நேற்றிரவு அறிவித்தார்.

MCO மீண்டும் நீட்டிக்கப்படும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் Tan Sri Muhyiddin Yassin சொன்னார்.

நாட்டில் புதிதாக பதிவாகும் கொரோனா சம்பவங்கள் குறையத் தொடங்கியிருந்தாலும், அரசாங்கம் கட்டம் கட்டமாகத் தான் தளர்வுகள் வழங்கும்.

அவ்வகையில், நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் தங்கியுள்ள மாணவர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் தத்தம் வீடுகளுக்கு திரும்ப அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. 

அதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOP விரைவில் வெளியிடப்படும் என்றும் Tan Sri Muhyiddin சொன்னார்.

MCO காரணமாக, நடப்பில் ஏறக்குறைய ஒரு லட்சம் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் இருந்து வீடு திரும்ப முடியாக சூழ்நிலையில் இருக்கின்றனர்.

பெரிய எண்ணிக்கை என்பதால், COVID-19 நோய் தொற்று அபாயம் கருதிஅவர்களை சொந்த வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அம்முடிவை தேசிய மாணவர்கள் ஆலோசனை மன்றம்  MPPK வரவேற்றுள்ளது.

அதற்கான வழிக்காட்டியை அரசாங்கம் வெளியிடும் வரை மாணவர்கள் பொறுமைக் காக்க வேண்டும் என அம்மன்றத்தின் தலைவர் Muhammad Amir Asyraf Mohd Sabri கேட்டுக் கொண்டுள்ளார்.

உணவுப் பொருள் விநியோகம் பற்றி அமைச்சு விளக்கம்!

MCO கடுமையாக்கப்பட்டுள்ள KL, Pusat Bandar Utara மற்றும் Selayang மொத்த வியாபாரச் சந்தை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதுமான உணவுகள் வழங்கப்படும்.

நடப்பில் வெறும் அரிசி, மாவு ஆகியவை மட்டுமே தங்களுக்கு கிடைப்பதாக, அப்பகுதி மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து, கூட்டரசு பிரதேச அமைச்சு அதனை தெரிவித்துள்ளது.

பொய்த் தகவல்!

SME எனும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான மானியங்களைப் பெற, பொது மக்கள் LHDN அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் என பகிரப்படும் தகவல் பொய்யானது.

விண்ணப்ப நடைமுறைகள் குறித்து நிதி அமைச்சு அறிவிக்கும் என அவ்வாரியம் தெளிவுப்படுத்தியது.

COVID-19 தொடர்பில் நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather