Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Apr 22, 2020


நாட்டில் இன்று பதிவான புதிய Covid-19 சம்பவங்களைக் காட்டிலும் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை கூடுதலாகப் பதிவாகியுள்ளது.

புதிதாக 103 பேர் நலமடைந்துள்ளனர்.

50 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை அடுத்து மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் Covid-19னில் இருந்து விடுபட்ட முதல் மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது. 

அம்மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் பச்சைப் பகுதிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள காலக் கட்டத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் அல்லது அங்கிருந்து  நகரங்களுக்குத் திரும்ப விரும்புவோருக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 

சம்பந்தப்பட்டவர்கள் சனிக்கிழமை தொடங்கி Gerak Malaysia எனும் செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaacob தெரிவித்தார். 

இணைய வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.  

எனினும் இவை யாவும் இன்னமும் விவாத நிலையிலேயே இருப்பதாக அமைச்சர் சொன்னார்.  

அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOPயும் அறிமுகப்படுத்தப்படும்.

உள்நாட்டு உயர்க்கல்விக் கழக வளாகங்களில் சிக்கிக் கொண்டுள்ள மாணவர்கள் கட்டங் கட்டமாகத்தான் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் பெருங் கூட்டமாகத் திரும்ப அனுமதிக்கப்பட்டால், Covid-19 பரவல் ஏற்படக் காரணமாகி விடலாம் என ஐயுறுவதாக பட்டதாரி மாணவர்கள் தன்னார்வ அறக்கட்டளைத் தலைவர் Tan Sri Lee Lam Thye சொன்னார்.

உயர்க்கல்விக் கழக மாணவர்களுக்குச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதியளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசப்படுவதாக நேற்று தற்காப்பு அமைச்சு அறிவித்திருந்தது. 

Mikro வணிகத் துறைகளுக்கான உதவித் திட்ட விண்ணப்பங்களைக் கையாளத் தாங்கள் முகவரையோ மத்தியஸ்தரையோ நியமிக்கவில்லை என Tekun Nasional தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் அனைத்தும் இணையம் வழி மட்டுமே செய்ய முடியும் என அது தெளிவுபடுத்தியது.

ஒரு தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather