Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தேர்வுகள் ரத்து - மாணவர்கள் கலங்க வேண்டாம்!

Apr 22, 2020


COVID-19 கிருமித் தொற்றினால், மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடாமல் இருப்பதை கல்வி அமைச்சு தொடர்ந்து உறுதிச் செய்து வருகின்றது.

அதே சமயம், தவிர்க்க முடியாத இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி சில தீர்க்கமான முடிவுகளையும் அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் ஒன்று தான் இவ்வாண்டுக்கான UPSR, PT3 பள்ளித் தேர்வுகளை ரத்துச் செய்யும் முடிவு.

இம்முடிவை பொதுவில் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இருந்த போதிலும், அத்தேர்வுகளில் மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவுச் செய்ய வேண்டும் என்ற கனவோடு, பல மாதங்களாக தயாராகி வந்த மாணவர்களுக்கு இம்முடிவு நிச்சயம் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருக்கும் என்றே கூறலாம்.

Image Credit: The College Fix

அத்தகைய மாணவர்கள், அம்முடிவை எவ்வாறு தாராள மனத்துடன் ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து கருத்துரைக்கின்றார், JB Temenggong Ibrahim ஆசிரியர் கல்விக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் சேதுபதி ராமசாமி.

“அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது மிக முக்கியம். தேர்வு ஒன்றே சகலமும்  என்ற நிலை மாறி, தேர்வு ஒரு நிலை, ஆனால் கல்வி கற்பது முக்கியம் என்ற நிலையை மாணவர்கள் அடைய வேண்டும். அதை தான் கல்வி அமைச்சும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தேர்வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் படிப்படியாக குறைத்து வருகின்றது. அதில் ஒரு முயற்சி தான், இந்த பள்ளி சார் மதிப்பீடு. கல்வி அமைச்சு சொல்வது போல, இது ஒரு தொடர் மதிப்பீடு என்றார்.

மாணவர்களுக்கு பெற்றோர்கள் இப்போது தான் அதிக மன தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர்

மாணவர்கள் அடிப்படை திறன்களை அளவாகப் பெற்று விட்டார்கள் என்றால், எந்தப் பரீட்சை, எந்தக் காலக்கட்டத்தில் தரப்பட்டாலும் அவர்கள் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். அதற்கு பெற்றோர்கள் முதல் தனிநபர்கள் மற்றும் பொது இயங்கங்கள் என எல்லோரும் உதவ முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

Image Credit: Sproute Creative

அந்த அடிப்படை திறன்கள் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.

அடிப்படை திறன்களில் ஒன்று, நடப்பிலுள்ள ஒரு பிரச்னைக்கு எந்ததெந்த கோணங்களில் சிந்தித்து முடிவெடுக்கலாம் என்பதாகிம். அப்படி சிறு சிறு விஷயங்களில் இருந்து தொடங்கும் இந்த திறன்கள், மாணவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அந்த தன்னம்பிக்கை அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை களைய உதவும். இதனால் அவர்களிடம் இயல்பாகவே தலைமைத்துவப் பண்புகளும் வந்து விடும். அந்த பண்பின் முக்கிய கூறு, முடிவெடுக்கும் திறன். இதை தான் ஆங்கிலத்தில் Critical & Creative Thinking என்பார்கள். இந்த திறன்களை மாணவர்களிடத்தில் வளர்க்க பெற்றோர்கள் இக்காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இவ்வேளையில், தேர்வுகள் ரத்தாகியிருக்கும் இதே சூழ்நிலை குறித்து பேசிய பகாங், Kuala Lipis, Tengku Ampuan Afzan ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த தமிழியல் முதுநிலை விரிவுரையாளரும், மதியுரை துறையில் முதுகலை பெற்றவருமான முனைவர் சரஸ்வதி குஞ்சுக்கண்ணன்....

ஒன்று மட்டும் நாம் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் மட்டும் இந்த பிரச்னை இல்லை; மாறாக உலகளாவிய நிலையில் பல நாடுகளில் மதிப்பீடுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனினும், அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு நிச்சயம் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் இத்தகைய முடிவுகள் குறித்து தேவையற்ற கவலைகள் கொள்ளத் தேவையில்லை. நம் நாட்டில் ஒவ்வொரு மதிப்பீடும் வரையறுக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். அதனால், நீங்கள் (மாணவர்கள்) இவ்வளவு நாள் படித்து, மேற்கொண்டு வந்த முயற்சிகள் எல்லாம் விரயமாகி விடுமோ, பயனில்லாமல் போய் விடுமோ என சிந்திக்க வேண்டாம். பாடத் திட்டத்தை மீறி எந்த விதமான மதிப்பீடும் நடக்காது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்வதே இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியாமான ஒன்று என்றார்.

தேர்வுகள் ரத்தாகி விட்டன என்ற கவலையைப் போக்கி, அடுத்த கட்ட கல்வி நிலைக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முனைவர் சரஸ்வதி குஞ்சுக்கண்ணன் கேட்டுக் கொண்டார்.

ராகா செய்தி நடத்திய சிறப்பு நேர்காணலில் அவர்கள் இக்கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.   

An article by: Sauriyammal Rayappan

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather