Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

எனது பிறந்தநாள் பரிசாக வீட்டிலேயே இருங்கள்!

Apr 21, 2020


COVID-19: போராட்டம் நீடிக்கலாம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO முடிந்த பிறகும், COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு எதிரான போராட்டம் 2021ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம்.

உலக சுகாதார நிறுவனம் WHO அதற்கு பரிந்துரைத்திருப்பதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் COVID-19 புதிய சம்பவங்கள் எண்ணிக்கையில் நல்ல மாற்றம் தெரிவது உண்மைதான்.

ஆனால், MCO முடிந்த பிறகும் மக்கள் அத்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டியிருப்பதாக Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

நேற்று நாட்டில் COVID-19 புதிய தொற்றுச் சம்பவங்கள் 36 வரை சரிந்தது; ஒரு மரணம் கூட நிகழவில்லை.

இவ்வேளையில், COVID-19 கோறனி நச்சில் தொற்று சம்பவங்ளுக்கான சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில், சுகாதார அமைச்சு பரவலான antibody சோதனையை மேற்கொள்வது பற்றி பரிசீலிக்கின்றது.

அச்சோதனைகள் வாயிலாக, ஏற்கனவே அத்தொற்றுக்கு ஆளானவர்கள் மத்தியில் இருக்கக்கூடியவர்கள், ஆனால் இன்னும் அடையாளம் காணப்படாதவர்களின் எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ள முடியும்.

இதன் வழி அக்கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேலும் ஆக்ககரப்படுத்த முடியும் என Dr Noor Hisham தெரிவித்தார்.

அச்சோதனை முறை நடப்புக்கு வந்தால், அமைச்சுக்கு, தனியார் கிளினிக்குகளின் ஒத்துழைப்பும் தேவைப்படலாம் என்றாவர்.

மற்றொரு நிலவரத்தில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் Datuk Dr Noor Hisham, COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியர்கள் காட்டும் ஒத்துழைப்பொன்றே, தாம் எதிர்பார்க்கும் மிகப் பெரிய பிறந்தநாள் பரிசு என கூறியிருக்கின்றார்.

மக்கள் தொடர்ந்து MCO-வுக்கு கட்டுப்பட்டு, வீட்டிலேயே இருப்பதுடன் சுத்தத்தைப் பேணி, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் தொடர்ந்து அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொய்த் தகவல்!

தேசிய பாதுகாப்பு மன்றம் MKN-னில் துணை தலைமை இயக்குநரை மேற்கோ ள்காட்டி, MCO நீட்டிக்கப்படுவதற்கான தேதி எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் பொய்யானது.

COVID-19 தொடர்பில் நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கம் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வழிகாட்டி முறை!

இணையம் வழி வாங்கப்பட்ட உணவை மோட்டார் சைக்கிளில் அனுப்பும் சேவைக்கான வழிகாட்டி முறை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, உணவு வைக்கும் பெட்டியை அன்றாடம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அந்த வழிக்காட்டியில் குறிப்பிட்டிருக்கின்றது. 

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன் 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather