Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

BPN உதவித் தொகை!

Apr 17, 2020


வங்கிக் கணக்கு இல்லாத B40 தரப்பினர் அரசாங்கத்தின் தேசிய பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விநியோகிக்கப்படும் தொகையை ரொக்கமாக அருகில் உள்ள BSN வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

அச்சமயம் அவர்கள் தங்களது அடையாள அட்டையை உடன் கொண்டுச் செல்ல வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்தது.

அவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அத்தொகையை மீட்கலாம்.  

உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரசு சாரா அமைப்புகள் தங்களது நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறையிடம் பதிந்து கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

NGO பணியாளர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிச் செய்ய அது அவசியம் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், வாகனங்களில் உணவு விநியோகம் செய்யும் அனைவரும் Covid-19 மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அது கூறியது.

இவ்வேளையில், ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால்தான் சுவாசக் கவசம் அணிய வேண்டும்.

நலமாக உள்ளவர்கள் சுவாசக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது தெரிவித்தது.  

Covid-19னில் இருந்து விடுபட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

201 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 69 சம்பவங்கள் பதிவாகி மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 251 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் இருவர் உயிரிழந்து மொத்த மரண எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் Covid-19 பீடித்தவர்களில் 600க்கும் அதிகமானோர் அந்நிய நாட்டவர்கள் என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

அவர்களில் அந்நியத் தொழிலாளர்கள், சுற்றுப் பயணிகள், அகதிகள் ஆகியோரும் அடங்குவர்.

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி சிவப்புப் பகுதிகள் பட்டியலில் ஆகக் கடைசியாக சபா, Kota Kinabalu சேர்ந்துள்ளது. 

அதனை அடுத்து நாடு முழுவதும் சிவப்பு பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. 

Kuala Terengganuவில் Covid-19 தொடர்பில் மரணம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை திரங்கானு மாநில சுகாதாரத் துறை மறுத்துள்ளது.

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95, RON97 பெட் ரோலின் விலை நிலை நிறுத்தப்படுகிறது.

RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 25 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 55 சென்னுக்கும் விற்கப்படும்.

டீசல் 3 சென் சரிந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 43 சென்னுக்கு விற்கப்படும்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather