Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : மீண்டும் மூன்று இலக்க எண்!

Apr 17, 2020


COVID-19: குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

நாட்டில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை மீண்டும் மூன்று இலக்க எண்ணுக்கு அதாவது 110ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், அக்கோறனி நச்சில் தொற்றில் இருந்து குணமடைபவர்கள்  எண்ணிக்கை, புதிதாக பதிவாகும் சம்பவங்களை காட்டிலும் அதிகம் என  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

நேற்று மட்டும் 119 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்; இதையடுத்துமொத்த எண்ணிக்கை ஈராயிரத்து 766ஆக அதிகரித்திருப்பதாக Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

மொத்த சம்பவங்களில் அவ்வெண்ணிக்கை 53.4 விழுக்காடாகும்.

COVID-19 : பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்படும்!

முதியோர் இல்லங்கள், அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக, சுகாதார அமைச்சு, சில அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கவிருப்பதாகவும் Dr Noor Hisham சொன்னார். 

குறிப்பாக கூட்டம் அதிகமுள்ள முதியோர் இல்லங்களில் சமூக நலத் துறை உதவியுடன் அப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களில் இன்னும் பலர் பரிசோதனைக்கு முன் வர தயங்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Pasar Borong Selayang-கில் 465 அந்நிய தொழிலாளர்கள் மீது அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவர்களில் 13 பேருக்கு மட்டுமே COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக Dr Noor Hisham சொன்னார். 

PPE: கையிருப்பு உறுதிப்படுத்தப்படும்!

சுகாதார அமைச்சின் கீழ், மருத்துவப் பணியாளர்கள் மாதத்திற்கு ஏறக்குறைய 59 மில்லியன் சுயப் பாதுகாப்பு கவசங்கள் (Personal Protection Equipment)  பயன்படுத்துகின்றனர்.

இதையடுத்து, தொடர் கையிருப்பை உறுதிச் செய்ய துறைச் சார்ந்த நிறுவனங்களுடன் அமைச்சு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் Dr Noor Hisham சொன்னார்.

சிலாங்கூரில் பதிவான மோசடிகள்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலுக்கு வந்த மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி இதுவரை, இணையம் வழி சுவாசக் கவசங்கள் விற்பனை தொடர்பில் சிலாங்கூரில் 150 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அம்மோசடிகள் தொடர்பில், 22 பேர் கைது செய்யப்பட்டு 17 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை தெரிவித்தது.

COVID-19 : சிங்கப்பூர் நிலவரம்!

சிங்கப்பூரில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஆக அதிகமாக 728 புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து அந்நாட்டில் இதுவரை பதிவான மொத்த சம்பவங்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 427ஆக அதிகரித்துள்ளது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather