← Back to list
IGP: நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்கின்றேன்!
Apr 15, 2020
IGP: நீதிமன்ற நடவடிக்கை தகுந்ததே!
COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO இன்று மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பொது மக்களில் பலர் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
MCO அமுலில் இருப்பது தெரிந்தும் சிலர் வேண்டுமென்றே வீட்டை விட்டு வெளியேறி, நடமாடி வருவதாக தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
இதன் தொடர்பில் பேசிய அவர்....
"Pematuhan masih lagi tidak sampai ke tahap yang kita sasarkan, ramai yang lupa, atau sengaja lupa, masih lagi keluar seperti biasa, jadi pihak polis tidak akan berkompromi dengan hanya memberikan kompaun tetapi kita akan hadapkan mereka ke mahkamah"
இப்படிபட்டவர்களுக்கு இனி அறிவுரை – எச்சரிக்கை எல்லாம் தாண்டி நீதிமன்ற நடவடிக்கை ஒன்றே சரிப்பட்டு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், MCO-வை மீறுபவர்களை நீதிமன்றம் கொண்டுச் சென்று, குற்றம் சாட்டும் அரசாங்கத்தின் முடிவை தேசிய காவல் படைத் தலைவர் வரவேற்றுள்ளார்.
ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை கண்டுக்கூட சிலருக்கு பயமில்லை; அதனை அவர்கள் ஒரு பொருட்டாக கருதாத நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கை தகுந்த ஒன்றே என Tan Sri Abdul Hamid Bador கூறுகின்றார்.
MCO-வை மீறியதற்காக, நேற்று வரை நாடு முழுவதும் ஏறக்குறைய 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கை செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்பில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான அபராதங்கள் வெளியிடப்பட்டதாக Ismail Sabri தெரிவித்திருந்தார்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather