← Back to list
Covid-19: 85 சம்பவங்கள் மட்டுமே!
Apr 16, 2020
கடந்த 4 வாரங்களில் நாட்டில் COVID-19 கோறனி நச்சில் கிருமித் தொற்றுக்கான புதிய சம்பவங்கள் எண்ணிக்கை முதன் முறையாக நூறுக்கும் குறைவாக அதாவது 85 ஆக மட்டுமே பதிவாகியுள்ளது.
நேற்று அக்கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து 169ஆக பதிவானது.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah
இதற்கு அரசாங்கத்தின் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் தான் காரணம் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
அவரது கருத்தை, மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Dr N ஞானபாஸ்கரனும் ஆமோதித்தார்.
"நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மக்கள் தங்களது சுய சுகாதாரத்தை பாதுகாத்து வருவதன் காரணமாகவும் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், விரைவிலேயே நாடு இத்தொற்றில் இருந்து விடுபடும்" என்றார்.
எனினும், இந்த ஒரு முறை பதிவான எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, மக்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்றும் Dr ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.
மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Dr N ஞானபாஸ்கரன்
இதனிடையே, இன்னும் பலர் MCO-வின் அவசியத்தை புரிந்துக் கொள்ளாமல் வெளியில் நடமாடி வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
அத்தகையோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்தும் Dr ஞானபாஸ்கரனும் கருத்துரைத்தார்.
"பொருத்தமான காரணங்கள் இல்லையென்றால், இத்தகையோர் நேரடியாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை மக்கள் உணர வேண்டும். தங்களது குடும்பம் மற்றும் சுற்றியுள்ளவர்களை நினைத்துப் பார்த்து, இத்தகைய தண்டனைகளில் சிக்காமல் இருக்க அரசாங்கம் கூறும் ஆலோசனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முதல் இரு கட்ட MCO-க்களை மீறியதற்காக நாடு முழுவதும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கைதாகியிருப்பது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
இவ்வேளையில், மலேசியாவில் COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு ஆளான ஒருவர் முழுமையாக குணமடையும் வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்.
அத்தொற்றுக்கான மிதமான அறிகுறிகள் கொண்டவர்கள் அல்லது அறவே அறிகுறிகள் காட்டதவர்கள் கூட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆனால், சில நாடுகளில் இந்த நடைமுறை இல்லை என Datuk Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.
உதாரணத்திற்கு பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் மிதமான அறிகுறிகள் கொண்டிருப்போரை வீடுகளில் தனிமைப்படுத்தும் முறையை கையாள்வதாக அவர் சொன்னார்.
இந்த ஒரு வித்தியாசம் தான், மலேசியாவில் புதிதாக அக்கிருமித் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவியிருப்பதாகவும் Dr Noor Hisham கூறினார்.
தொடர்தாற்போல் 3 நாட்களாக, அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும், அதிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather