Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நீதிமன்றம் கொண்டுச் செல்லப்படுவர்!

Apr 14, 2020


நாட்டில் மேலும் 170 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனை அடுத்து இதுவரை பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை நாலாயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் 202 பேர் பூரண குணமடைந்து மொத்தமாக இதுவரை நலமடைந்தவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.

மரணங்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார். 

இவ்வேளையில், Covid-19னால் மரணமடைந்தவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் ஆண்கள் என Datuk Dr Noor Hisham Abdullah குறிப்பிட்டார்.

அவர்களில் பெரும்பாலானோர் Sri Petaling சமய நிகழ்வில் பங்கேற்றவர்கள் என்றாரவர்.

நாளை முதல் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலுக்கு வரும் நிலையில், அதனை மீறுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

MCOவைப் பின்பற்றாதவர்களுக்கு இதற்கு முன் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டாலும், சாலைகளில் இன்னமும் அதிகமான வாகனங்கள் இருப்பதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

நாளை தொடங்கி 12 அத்தியாவசியப் பொருட்கள் MCO அமலாக்கம் நெடுகிலும் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, கோழி, முட்டை ஆகியவையும் அடங்கும்.

KL, Jalan Masjid India மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று முதல் MCO கடுமையாக்கப்படுகிறது.

Hulu Langat, Sungai Lui 21றில் இருந்து 23 வரை அமலில் இருந்த கடுமையாக்கப்பட்ட MCO இன்றுடன் முடிவடைகிறது.

பஹாங், Felda Jengka 17ழில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மாநில காவல் துறை மறுத்துள்ளது.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கான கட்டாய சந்தா தொகையைச் செலுத்தும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத ஊதியத்திற்கான கட்டாய சந்தா தொகையைச் செலுத்த அவர்களுக்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அக்கால அவகாசம் இம்மாதம் 24 ஆம் தேதி வரை என நேற்று EPF அறிவித்திருந்தது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather