← Back to list
Covid-19: தடுப்பு நடவடிக்கைகள் பலனளித்து வருகின்றன!
Apr 14, 2020
Covid-19: தடுப்பு நடவடிக்கைகள் பலனளித்து வருகின்றன!
COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு எதிரான மலேசியாவின் போராட்டம் சரியாக சென்றுக் கொண்டிருக்கின்றது!
அக்கிருமித் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வ பலனைக் கொடுத்திருப்பதே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் கூறுகிறார்.
ஏப்ரல் மாத மத்தியில் மலேசியாவில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டும் என இதற்கு முன் JP Morgan கணித்திருந்தது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை நான்காயிரத்து 817ஆக மட்டுமே இருப்பதை Datuk Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
இதற்கு பிறகு, அந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே, முதல் இரு கட்ட MCO-வைக் காட்டிலும் நாளைத் தொடங்கும் மூன்றாம் கட்ட MCO மிக முக்கியமானது என்றும் Dr Noor Hisham சொன்னார்.
3ஆம் கட்ட MCO ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.
PPE : இரு வாரங்களுக்கு மட்டுமே இருக்கின்றது!
முன்வரிசைப் பணியாளர்களுக்கான சுயப் பாதுகாப்பு கவசம் PPE கையிருப்பு இன்னும் இரு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்றது.
எனவே, அரசு சாரா இயக்கங்கள் உள்ளிட்ட இதர தரப்பினர் அவற்றை நன்கொடையாக வழங்க முன்வரலாம் என Datuk Dr Noor Hisham கேட்டுக் கொண்டார்.
கிருமி நாசினி வாங்கும் போது கவனம் தேவை!
கிருமி நாசினி வாங்கும் போது குறிப்பாக இணையம் வழி வாங்குவதற்கு முன்பாக, சுகாதார அமைச்சிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அக்கிருமி நாசினிகள் போதுமான அளவுக்கு அதாவது குறைந்தது 60 விழுக்காட்டுக்கும் கூடுதலான கிருமியை அழிக்கும் வீரியத்தை கொண்டிருப்பதை உறுதிச் செய்வது அவசியம் என மலாக்கா சுகாதாரத் துறை தெரிவித்தது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather