Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அனுமதி இல்லை!

Apr 13, 2020


நாட்டில் மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகியுள்ளார்.

அதனை அடுத்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

134 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரை நாலாயிரத்து 817 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒட்டு மொத்தத்தில் ஈராயிரத்து 276 பேர் அதாவது 47 விழுக்காட்டினர் பூரண குணமடைந்துள்ளனர்.

சிகை திருத்தும் கடைகள், சிகையலங்கார நிலையங்கள், மூக்குக் கண்ணாடிக் கடைகள் ஆகியவை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படாது.

தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அச்சேவைகள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கினால் நேரும் பின் விளைவுகள் குறித்து பல தரப்புகள் ஐயம் எழுப்பியதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்த முதல் நாளில் இருந்து தத்தம் உயர்க்கல்விக் கூட வளாகங்களில் சிக்கிக் கொண்ட அனைத்து மாணவர்களும் அங்கேயே இருப்பது நல்லது.

சுகாதார அமைச்சு, அரச மலேசிய காவல் துறை உள்ளிட்ட தரப்புகளின் பரிந்துரையின் பேரில் அந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் கூறினார்.  

தீபகற்ப மலேசியாவில் தற்போது மூன்று மாவட்டங்கள் மட்டுமே Covid-19 சம்பவங்கள் அறவே இல்லாத பகுதிகளாக இருக்கின்றன. 

ஏற்கனவே நான்கு மாவட்டங்கள் அப்பட்டியலில் இருந்த நிலையில், ஆகக் கடைசியாக பேரா, Kamparரிலும் அக்கிருமித் தொற்று பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கிளந்தான், Machang, கெடா, Yan, திரங்கானு, Hulu Terengganu ஆகிய மூன்று மட்டுமே தற்போது Covid-19னில் இருந்து விடுபட்ட மாவட்டங்களாக உள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள முதலாளிகள் இம்மாதம் தங்கள் தொழிலாளர்களுக்கான கட்டாய சந்தா தொகையைச் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத ஊதியத்திற்கான கட்டாய சந்தா தொகையை அவர்கள் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செலுத்தலாம் என EPF அறிக்கை வழி கூறியது.    

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather