Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தற்போதைக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது!

Apr 12, 2020


மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் ஒன்று மற்றும் இரண்டாம் கட்ட MCO அமலாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட நடைமுறையைத் தக்க வைத்து கொள்வது நல்லது.

அரசாங்கத்திற்கு அது பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

முதல் இரு கட்ட MCO, Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவியிருப்பதை Datuk Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், முடி திருத்தும் சேவை உள்ளிட்ட சில தொழில் மற்றும் சேவைத் துறைகள் கட்டங் கட்டமாகச் செயல்படுவது குறைந்தது இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் Covid-19 பரவல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.   

மற்றொரு நிலவரத்தில், உயர்க்கல்விக் கழக வளாகங்களில் தங்கி இருக்கும் மாணவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்ப தற்போதைக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என Noor Hisham வலியுறுத்தினார்.

மாணவர்களை வீடு திரும்ப அனுமதித்தால், Covid-19 மேலும் பரவாது என்பதை உறுதிப்படுத்த, தரவு விவரங்களைப் பார்ப்பதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.   

Covid-19 பரவலைத் தொடர்ந்து அரசாங்கம் அறிவித்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஒரே தடவையாக வழங்கப்படும் 200 ரிங்கிட் உதவிநிதி ஆறாம் படிவம், Diploma மற்றும் அதற்கு ஈடான கல்வியை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

அந்த உதவிநிதி உயர்க்கல்விக் கழக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், matriculation கல்வித் திட்டத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவு முதல் தவணையின் முடிவு,  இரண்டாம் தவணையின் மதிப்பீடுகள் ஆகியவற்றை இணைத்து அதன் அடிப்படையில் இருக்கும் என உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.

Covid-19 பீடித்திருந்த நபர் ஒருவர் தங்களது மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப்படுவதை KL மருத்துவமனை மறுத்துள்ளது.

அந்நபர் வேறு ஒரு வகை சுகாதாரப் பிரச்னையை எதிர்நோக்கியிருந்தவர் என அது தெளிவுபடுத்தியது.

சிலாங்கூர், Shah Alam Seksyen 6றில் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவலை மாநில Menteri besar மறுத்துள்ளார்.

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Covid-19னால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகம் பதிவு செய்த நாடாக அமெரிக்கா, இத்தாலியை முந்தியிருக்கிறது.

அமெரிக்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கொள்ளை நோய்க்கு பலியாகியிருப்பதாக Johns Hopkins பல்கலைக்கழகத்தின் ஆகக் கடைசி தரவு காட்டுகிறது.

இத்தாலியில் 19 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather