← Back to list
Covid-19 : தினசரி செய்தியாளர் சந்திப்பில் இருந்து...
Apr 10, 2020
இதுவரையிலான நிலவரப்படி 97 விழுக்காட்டினர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 775 சாலை தடுப்புச் சோதனைகள் நடத்தப்பட்டு, 5 லட்சத்துக்கும் அதிகமான வாகன மோட்டிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் 600 பேர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 300க்கும் அதிகமானோருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணை அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 7400க்கும் அதிகமாகும்.
அதிகமானோர் இன்னும் ஆணையை மீறுவதால், அபராதத் தொகையை ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து மேலும் உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசிலிக்கின்றது.
போக்குவரத்துத் துறையின் உதவியுடன் காவல் துறை மேலும் அதிகமான சாலைகளில் தடுப்புச் சோதனைகளை நடத்தும்.
Covid-19 குறித்த பொய் தகவல்களைப் பரப்பியது தொடர்பில் 207 விசாரணை அறிக்கைக்களை காவல் துறை திறந்துள்ளது.
அவர்களில் 23 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுவிட்டது.
நாடெங்கிலும் சிவப்புப் பட்டியலிடப்பட்ட 24 இடங்களையும் சேர்த்து மொத்தம் 83 இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather