← Back to list
Covid-19: மலேசியாவில் மரண விகிதம் குறைவு!
Apr 10, 2020
10 விழுக்காட்டினர் அந்நிய நாட்டவர்கள்!
நாட்டில் COVID-19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் அந்நிய நாட்டவர்கள்.
நான்காயிரத்திற்கும் அதிகமான சம்பவங்களில், அவர்களது எண்ணிக்கை 416 பேர் என சுதாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
இதுவரை அந்நிய நாட்டவர்களில் இருவர் அந்நோய் தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனிசியா, இந்தியா, மியன்மார், பாகிஸ்தான், Philippines ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வேளையில், அகதிகள் மற்றும் இந்நாட்டில் தஞ்சமடைந்தோரை COVID-19 மருத்துவப் பரிசோதனைக்கு ஊக்குவிக்க, அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையம் மற்றும் இதர அரசு சாரா அமைப்புகளுடன் சுகாதார அமைச்சு ஒத்துழைத்து வருவதாகவும் Dr Noor Hisham சொன்னார்.
மலேசியாவில் COVID-19 மரண விகிதம் குறைவு!
மலேசியாவில் COVID-19 மரண விகிதம் இன்னும் குறைவாகவே இருக்கின்றது.
இந்நாட்டில் அந்நோய் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கையில், மரண விகிதம் சராசரியாக 1.58 விழுக்காடு மட்டுமே.
ஆனால், மற்ற நாடுகளில் அது 4.6-றில் இருந்து 5.6 விழுக்காடு வரை இருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
மலேசியாவில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கின்றன என்பதையே இது காட்டுவதாகவும் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
இதனிடையே, நாட்டில் அக்கிருமித் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 38 விழுக்காடு என அவர் தெரிவித்தார்.
ஆனால் உலகளவில் அது சராசரியாக 21 விழுக்காடாக மட்டுமே இருப்பதாக Dr Noor Hisham கூறினார்.
COVID-19: 121 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் நேற்று மேலும் 109 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவாகிய வேளை, ஆக இளம் நபராக 23 வயதுப் பெண் அத்தொற்றுக்கு பலியாகியிருக்கின்றார்.
இருந்த போதிலும், அத்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; நேற்று ஒரு நாளில் மட்டும் 121 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather