Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இனி ஆயிரம் ரிங்கிட் அபராதம்!

Apr 08, 2020


இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாதவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். 

நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயின் கீழ் அத்தொகை அபராதமாக விதிக்கப்படும் என Bukit Aman தெரிவித்தது.

MCOவைப் பின்பற்றாதவர்கள் காவல் நிலையத்திற்குக்  கொண்டுச் செல்லப்படுவர்.

அங்கு அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு அதனை அவர்கள் இரு வாரங்களுக்குள் செலுத்தி விட வேண்டும்.

நாட்டில் மேலும் இருவர் Covid-19னால் மரணமடைந்துள்ளனர்.

அதனை அடுத்து இதுவரை பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 156 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வெண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை நாலாயிரத்து 119 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 166 பேர் நலமடைந்து இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.

நெகிரி செம்பிலான், Rembauவில் Pedas, Pilin, Kundur, Batu Hampar ஆகிய பகுதிகளை உட்படுத்திய புதிய cluster சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அங்கு 27 பேருக்கு Covid-19 தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் சில பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர்.

அப்பள்ளி நடத்திய கூட்டமொன்றில் Sri Petaling சமய நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

குறைந்தது 41 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்த சிவப்புப் பகுதிகள் பட்டியலில் சிலாங்கூரில், Sepang, சரவாக்கில் Kota Samarahan ஆகிய இரு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அவ்விரு இடங்களையும் சேர்த்து நாட்டில் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்கம் கூடிய விரைவில் பொதுமக்களுக்கு இலவச சுவாசக் கவசங்களை விநியோகிக்கவிருக்கிறது.

ஒரு வீட்டுக்கு நான்கு சுவாசக் கவசங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.

Covid-19னை விரைந்து கண்டுபிடிக்க உதவும் சோதனை kitட்டை விற்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள Sebenarnya.my இணைய அகப்பக்கத்தை வலம் வரலாம்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather