← Back to list
செல்லப் பிராணிகளிடம் இருந்து வைரஸ் பரவாது!
Apr 08, 2020
COVID-19 : தனியார் மருத்துவமனைகள் தயார்!
நாட்டில் Covid-19 கிருமித் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க பெரிய தனியார் மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன.
தங்களது தொற்று நோய்களுக்கான மருத்துவர்களும், நிபுணர்களும் சுகாதார அமைச்சுடனான இணையம் வழி பயிற்சிகளில் பங்கேற்று, பணிக்கு தயாரக இருப்பதாக மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் The Star-ரிடம் தெரிவித்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.
எனினும், சபா, சரவாக் மற்றும் தீபகற்பத்தின் இதர சில மாநிலங்களில் உள்ள சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகள் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்தது.
செல்லப் பிராணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது!
செல்லப் பிராணிகள் வாயிலாக கொரோனா வைரஸ் பரவாது என்பதை மலேசிய கால்நடை சேவை துறை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
நடப்பு அறிவியல் ஆய்வின் படி, சில செல்லப் பிராணிகளுக்கு Covid-19 தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், அக்கிருமி மனிதர்களுக்கு பரவுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இல்லை என அத்துறை தெரிவித்தது.
வெளிநாடுகளில் இதுவரை கொரோனா கிருமித் தொற்றியவர்களிடம் இருந்து தான் பிராணிகளுக்கு அது பரவியிருக்கின்றது.
எனவே தான், அக்கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் தங்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து தள்ளியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
COVID-19: பொய்த் தகவல் பரப்பாதீர்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு MCO-வுக்கான எஞ்சிய இக்காலக்கட்டத்தில் பேரங்காடிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்படும் என கூறி பரவி வரும் குரல் பதிவுகள் பொய்யானது என Bukit Aman கூறியிருக்கின்றது.
Covid-19 நோய்ப் பரவல் தொடர்பில் நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கம் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சொந்தமாக சுவாசிக்க தொடங்கினார் பிரிட்டன் பிரதமர்!
Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமர் Boris Johnson, சுவாச உதவிக் கருவி இன்றி சொந்தமாக சுவாசிக்க தொடங்கியிருக்கின்றார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather