← Back to list
MCO: பொறுப்புடன் செயல்படுங்கள்!
Apr 07, 2020
MCO: பொறுப்புடன் நடந்துக் கொள்ளுங்கள்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு MCO-வை மீறுவோரிடம் கடுமையாக நடந்துக் கொள்ள காவல் அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை!
தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador அதனை தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த நலன் கருதி, COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த இந்த MCO காலக்கட்டத்தில் அயராது கண்காணிப்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் நிலைமையைப் பொது மக்கள் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என IGP வலியுறுத்தினார்.
இதற்கு முன் சபா Kunak-கில், MCO-வை மீறிய இளையோர் கும்பலொன்றை காவல் அதிகாரி ஒருவர் பிரம்படி கொடுத்து தண்டித்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக்க வேண்டாம் என்றும் IGP கேட்டுக் கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில், சில அந்நிய நாட்டவர்கள் MCO-வை மீறி நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள துறைமுகம் வாயிலாக சத்தமில்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்ப முயற்சித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்திருப்பதாக IGP சொன்னார்.
மேலும் சில செய்திகள் சுருக்கமாக:
1. Covid-19 கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ள பிரிட்டன் பிரதமர் Boris Johnson-னின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. Manchester City கால்பந்து அணி நிர்வாகி Pep Guardiola-வின் தாயார் கொரோனா கிருமித் தொற்றினால், Spain-னில் மரணமுற்றார்.
3. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 621-ஆக அதிகரித்துள்ளது; மரண எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.
4. ஜப்பானில் வேகமாக பரவி வரும் Covid-19 நோய்ப் பரவலை கட்டுப்படுத்த ஆக சீக்கிரமாக இன்று தலைநகர் தோக்கியோ மற்றும் இதர 6 பகுதிகளில் அவசர கால நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather