← Back to list
MCO: காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்!
Apr 06, 2020
காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு MCO அமுலாக்கப் பணிகளில் இறங்கியுள்ள காவல் துறைக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம் என, தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob பொது மக்களை வலியுறுத்தியிருக்கின்றார்.
மக்களின் நலன் கருதி தான் கடந்த 3 வாரங்களாக அவர்கள் அப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை மலேசியர்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றார் அவர்.
நடப்பில் இன்னும் சிலர் அந்த உத்தரவை மீறி வருவதுடன், ஒரு சிலர் கோபத்தைக் காட்டும் விதமாக காவல் வீரர்களிடம் குரலை உயர்த்திப் பேசுவதும், வாக்குவாதம் புரிவதுமாக உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த சனிக்கிழமை மட்டும், அந்த உத்தரவை மீறியதற்காக நாடு முழுவதும் ஏறக்குறைய 370 கைது செய்யப்பட்டனர்.
இவ்வேளையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறுவோருக்கு சிறைத் தண்டனை விதிப்பது குறித்த விவகாரம் தேசிய சட்டத்துறை, PDRM மற்றும் சிறைச்சாலைத் துறை ஆகியவற்றுடன் இணைந்து விரைவில் கலந்தாலோசிக்கப்படும் என்றும் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
சிறைகளில் நெரிசலை தவிர்க்கவும், Covid-19 கிருமிப் பரவலை தடுக்கவும் சிறைத் தண்டனை விதிக்கும் முடிவை கைவிடுமாறு சிறைச்சாலைத் துறை நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டிருப்பதே அதற்கு காரணம்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனாப் பரவல் இல்லை!
நாட்டில் இதுவரை சிறைச்சாலை கைதிகள் மற்றும் பணியாளர்களிடையே கொரோனா கிருமித் தொற்றுப் பரவிய சம்பவம் எதுவுமில்லை என்பதை மலேசிய சிறைச் சாலைத் துறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
மருத்துவப் பரிசோதனைக்காக புதிய கைதிகளை தனிமைப்படுத்தி வைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அத்துறை தெரிவித்தது.
COVID-19: உணவுகள் வாயிலாக பரவுவதாக ஆதாரம் இல்லை!
COVID-19 கிருமி உணவுகள் வாயிலாக பரவலாம் என்பது தொடர்பில் எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
ஜொகூரில் உணவக ஊழியர் ஒருவர் அக்கிருமித் தொற்றுக்கு ஆளானதை அடுத்து, பொது மக்கள் மத்தியில் எழுந்த அக்குழப்பத்திற்கு அவர் பதிலளித்தார்.
திவாலானவர்களும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
தேசிய பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உதவிப் பெறத் தகுதியானவர்கள், ஆனால் திவால் பட்டியலில் இருப்பவர்கள், இணையம் வழி அவ்வுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்டவர்கள் இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம் என உள்நாட்டு வருவாய் வாரியம் கூறியது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் அவை பரிசீலிக்கப்படும் என்றும் LHDN தெரிவித்தது.
இதனிடையே, அத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு முதல் கட்டமாக இன்று தொடங்கி உதவித் தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது.
இதன் வழி 83 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather