← Back to list
MCO-வுக்கு ஆதரவாக மலேசியர்கள்!
Apr 04, 2020
MCO கடுமையாக்கப்பட வேண்டும் – மலேசியர்கள் கருத்து!
தேசிய பாதுகாப்பு மன்றம் நடத்திய இணையம் வழி வாக்கெடுப்பில், பெரும்பாலான மலேசியர்கள், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
அவ்வாக்கெடுப்பில் பங்கேற்ற 2 லட்சத்து 30 ஆயிரம் பேரில், ஏறக்குறைய 96 விழுக்காட்டினர், அமுலாக்க அதிகாரிகள் மிக மிக கண்டிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த MCO காலக்கட்டத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் போதுமான உணவுக் கையிருப்பு இருப்பதாக 90 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
138 மருத்துவப் பணியாளர்களுக்கு Covid-19 கிருமித் தொற்று!
நாட்டில் சுகாதார அமைச்சின் 138 மருத்துவப் பணியாளர்களுக்கு Covid-19 கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
எனினும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் Covid-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அவர்களுக்கு அக்கிருமித் தொற்றவில்லை.
மாறாக, அவர்களில் 42 விழுக்காட்டினர், KL Sri Petaling பள்ளிவாசல் சமய நிகழ்வு பங்கேற்பாளர்களுடன் தொடர்புடைய திருமணங்களுக்குச் சென்றதால் அக்கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah இதனை தெரிவித்தார்.
மூவாயிரம் பேரை சுகாதார அமைச்சு கண்காணிக்கிறது!
Sri Petaling பள்ளிவாசல் சமய நிகழ்வில் பங்கேற்றவர்களில், ஏறக்குறைய மூவாயிரம் பேரை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
சம்பந்தப்பட்டவர்களில் சிலர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று இன்னும் மலேசியா திரும்பாதவர்கள் என Datuk Dr Noor Hisham தெரிவித்தார்.
அதனால் தான் அவர்கள் இன்னும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அவர்கள் குறித்த தகவல்கள் இருப்பதால் கண்காணிப்பு தொடரப்படுகிறது;
சம்பந்தப்பட்டவர்கள் நாடு திரும்பும் போது, அவர்கள் மீது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றாரவர்.
COVID-19 தகவல்களுக்கு HOTLINE எண்கள்!
COVID-19 தொடர்பான மேல் விவரங்கள் தேவைப்படும் பொது மக்கள், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் hotline எண்களை (1800-18-8030) தொடர்புக் கொள்ளலாம்.
உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே மக்கள் பெறுவதை இதன் வழி உறுதிச் செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்தது.
புகைப்படம்: தினமணி
தடை உத்தரவு மீறல்! தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக, 24 மணி நேரத்தில், 49 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி, 54 ஆயிரத்திற்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில் மக்கள் ஒத்துழைக்காவிட்டால் அந்த உத்தரவு கடுமையாக்கப்படும் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளாா்.
ஆகக் கடைசி நிலவரப்படி தமிழகத்தில் 411 பேருக்கு அக்கிருமித் தொற்றியிருக்கின்றது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather