← Back to list
கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு!
Apr 04, 2020
அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாதவர்களைக் காவல் துறையினரால் கைது செய்ய முடியும்.
அதற்கு சட்டத்தில் இடமுண்டு.
1967 காவல் துறைச் சட்டம், 1988 தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை அதற்கு வகை செய்வதாகக் கூறுகிறார் குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர் திரு. விஜய் ஈஸ்வரன்.
“அத்தியாவசியத் தேவைக்கு வெளியே இருக்கலாம். அதைத் தவிர்த்து அதிகாரப்பூர்வ அலுவல்கள் அல்லது நமது வேலை essential categoryயில் இருந்தால் வெளியில் நடமாட முடியும். ஆனால் அதற்கு ஆதாரமாக முதலாளிமார்கள் கொடுத்த அதிகாரப்பூர்வ கடிதத்தைக் காவல் துறையினரிடம் காட்ட வேண்டும்” என அவர் சொன்னார்.
திரு. விஜய் ஈஸ்வரன்
குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர்
தகுந்த காரணங்கள் இல்லையென்றால் காவல் துறையினர் கைது செய்வதைத் தடுக்க இயலாது.
“ஒருவரைக் கைது செய்து, 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் நிறுத்தி, தடுப்புக் காவலில் வைக்க முடியும். அதன் பின் கைது செய்யப்படுவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வாய்ப்புள்ளது. குற்றம் நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்” என்றாரவர்.
உரிய காரணங்கள் இல்லாததற்காக காவல் துறையினர் கைது செய்தால், அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் பட்சத்தில் அதன் பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
“எப்படி நீங்கள் கைது செய்யலாம்; வெளியில் நடமாட எங்களுக்கு உரிமையுண்டு எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது முற்றுவது சரியல்ல. மரியாதை குறைவாக நடந்து கொண்டால், காவல் துறையினர் தங்களது கடமையை ஆற்ற நாம் முட்டுக் கட்டையாக இருக்கின்றோம். அது தவறு; அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு நிரூபணம் ஆனால், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்” என அவர் சுட்டிக் காட்டினார்.
காவல் துறையினர் தடுத்து நிறுத்தும் போது, அவர்களிடம் காட்டும் அடையாள அட்டையில் உள்ள முகவரி அதிக தூரமுள்ள வேறு இடமாக இருந்தால், அருகில்தான் வசிக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக தண்ணீர், மின்சாரக் கட்டண ரசீசுகளை நாம் உடன் வைத்திருப்பது நல்லது என்றும் விஜய் ஈஸ்வரன் ஆலோசனை கூறினார்.
- சுகந்தமலர் முனியாண்டி -
Article by Suhanthamalar Muniandi
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather