← Back to list
இனி அறிவுரை இல்லை!
Apr 04, 2020
Photo : Awani
இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில், சாலைகளில் இன்னமும் அதிகமான வாகனங்களைப் பார்க்க முடிகிறது.
பொறுப்பற்ற சில தரப்பினர் ஆங்காங்கு செல்ல பல்வேறு காரணங்களைத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
“சந்தைக்குச் செல்வது, வங்கிக்குச் செல்வது, உறவினர்களைக் காணச் செல்வது, அருகில் உள்ள பெற்றோரைப் பார்க்கச் செல்வது, மருந்து வாங்குவது, உணவு வாங்கச் செல்வது” என அவர்கள் பல காரணங்களைக் கூறுவதாக KL, Sentul காவல் துறைத் தலைவர் ACP S. சண்முகமூர்த்தி தெரிவித்தார்.
ACP S. சண்முகமூர்த்தி
மேலும் சிலர் கடிதங்களைக் கொடுத்து இங்கு செல்வதாகவும் அங்கு செல்வதாகவும் கூறுகின்றனர்.
“அவர்கள் கூறுவதன் அடிப்படையில் விசாரித்தால், சில சமயங்களில் அலுவலகங்கள் சில ரகசியமாகச் செயல்படுவது தெரிய வருகிறது. அது குறித்து DBKLலிடம் தெரியப்படுத்தி மேல் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டுள்ளோம். இன்னும் சிலர் தாங்கள் வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும் புகார் கொடுக்கின்றனர்” என சண்முகமூர்த்தி குறிப்பிட்டார்.
பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி நடந்து கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
“தேவையில்லாத காரணங்களுக்கான வெளியே வர வேண்டாம். பக்கத்திலேயே உள்ள இடங்களுக்குச் செல்லலாம்; நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம். அறிவுரை கூறுவது நிறுத்தப்பட்டு விட்டது. அமலாக்கம் தற்போது சற்று கடுமையாக இருக்கிறது. கைது நடவடிக்கை அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. தக்க காரணம் இல்லாமல் வெளியே இருந்தால், நிச்சயம் கைதாகலாம். கைது செய்யப்பட்டால், காவல் துறையைக் குறை கூறக்கூடாது” என அவர் எச்சரித்தார்.
Covid-19 பரவலைத் தடுக்க, நாட்டுக் குடிமகனாக நாம் நமது கடமையை ஆற்ற வேண்டும் என்றும் சண்முகமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
- சுகந்தமலர் முனியாண்டி -
Article by Suhanthamalar Muniandi
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather