Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO மீதான முடிவு அடுத்த வாரம்!

Apr 03, 2020


Covid-19 : மலேசியர்களில் 80 விழுக்காட்டினருக்கு மிதமான அறிகுறிகள்!

Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர்களில் 80 விழுக்காட்டினர், மிதமான அறிகுறிகளை கொண்டுள்ளனர்;  அல்லது அறவே அறிகுறிகளை கொண்டிருக்கவில்லை!

அக்கிருமித் தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டுள்ளவர்கள் மட்டும் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொண்டால் போதும் என உலக சுகாதார நிறுவனம் WHO கூறியிருந்தது;

ஆனால், அவ்விவகாரத்தில் சுகாதார அமைச்சு காட்டிய தீவிரத்தால் மேலும் அதிகமான கொரோனா சம்பவங்களை அடையாளம் காண முடிந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

சில சம்பவங்கள் இளம் வயதினரை உட்படுத்தியிருக்கின்றது; இதற்கு, அவர்கள் தாமதமாக சிகிச்சைப் பெற வருவதே காரணம் என Dr Noor Hisham சொன்னார்.

இவ்வேளையில், கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கையை பொறுத்து நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கப்படும் என்றாரவர்.

 

 Covid-19 தொற்றை தொழில்துறை சார்ந்த நோயாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்!

Covid-19 தொற்றை,  சட்டப்படி தொழில்துறை சார்ந்த நோயாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC உள்ளிட்ட 51 அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன் வழி வேலையிடங்களில் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகும் தொழிலாளர்களின் நலன் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என MTUC கூறியது.

MTUC தவிர்த்து, தேசிய வங்கி தொழிலாளர்கல் சம்மேளனம், தேசிய விமானப் பணியாளார்கள் சம்மேளனம் ஆகியவை இக்கோரிக்கைக்கு குரல் கொடுத்துள்ளன.

 

 SPM தேர்வை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்க கோரிக்கை!

கொரோனா நோய்ப் பரவலை அடுத்து இவ்வாண்டு நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட SPM தேர்வை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்குமாறு, கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழு PAGE கோரிக்கை முன் வைத்துள்ளது.

ஆண்டு இறுதியில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமாக ஏற்படும் வெள்ளப் பிரச்னையை கருத்தில் கொண்டு PAGE அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

 இந்தியா, திருச்சியில் இருந்து 359 மலேசியர்கள் நாடு திரும்பினர்!

 தமிழ்நாடு திருச்சியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 359 மலேசியர்கள், இரு விமானங்கள் வாயிலாக நேற்று மாலையில் நாடு வந்து சேர்ந்துள்ளனர்.

 எஞ்சியுள்ளவர்கள் கட்டம் கட்டமாக மலேசியா அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather