Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO: Autism பிள்ளைகளுக்கான ஆலோசனைகள்!

Apr 02, 2020


புகைப்படம்: FreeDesignFile

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலில் உள்ள இக்காலக்கட்டம் AUTISM எனும் மதியிறுக்கக் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு மிக சவாலாக அமையும் என்றே கூறலாம்.

இந்நிலையில், நம்மை சுற்றி என்ன நடக்கின்றது, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO) என்றால் என்ன ஆகியவை குறித்து பெற்றோர்கள் தாரளமாக பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறலாம்.

அதற்கான முறைகள் குறித்து விவரிக்கின்றார், PJ-விலுள்ள சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய பிள்ளைகளுக்கான பள்ளி ஆசிரியர் குணவதி தட்சனாமூர்த்தி.

ஆசிரியர் குணவதி தட்சனாமூர்த்தி

“Social Stories என்ற முறையைப் பயன்படுத்தி, கதை வாயிலாகவோ அல்லது படங்கள் வாயிலாகவே பெற்றோர்கள் இந்த MCO குறித்துப் பிள்ளைகளுக்கு விளக்கம் அளிக்கலாம், இதன் வழி, பிள்ளைகள் சுற்றி நடக்கும் சூழலைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.அதே சமயம், நிலைமை சீரானதும் தாங்கள் வழக்கம் போல் வீட்டில் இருந்து வெளியே அல்லது பள்ளிக்குச் செல்லலாம்; நண்பர்களை காணலாம் என்றும் பெற்றோர்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறலாம்” என்றாரவர்.

இதனிடையே, வீட்டில் இருந்து வெளியேற முடியாத இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் என்ன செய்யலாம் என கேட்டதற்கு....

“MCO காலக்கட்டத்தில், வீட்டில் இருந்து வெளியேற முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது; இதனை சமாளிக்க, காலையில் பிள்ளைகள் எழுந்தவுடன்  பெற்றோர்கள் அவர்களுக்கு எளிதான உடற்பயிற்சிகள், பாடல்களை பயன்படுத்தி நடன அசைவுகளையும் கற்றுத் தரலாம்; பெற்றோர்களும் உடன் சேர்ந்து அவர்களுடன் நடனமாடலாம். தவிர, சில கை வேலைகளையும் கொடுக்கலாம். மாவுப் பயன்படுத்தி சொந்தமாக களிமண் தயாரிப்பது உள்ளிட்டவை அதிலடங்கும்” என்று தெரிவித்தார்.

PJ-வில் இயங்கி வரும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய பிள்ளைகளுக்கான பள்ளி நிறுவனர் ரீத்தா அந்தோணி

 

இந்நிலையில், இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி அப்பள்ளி நிறுவனர் ரீத்தா அந்தோணி கூறிய போது....

“கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளை தனிமையில் விடக்கூடாது. அவர்களுக்கு சிறு சிறு வீட்டு வேலைகளை கற்றுக் கொடுக்கலாம். உதாரணமாக துணி வாலியை தூக்குவது, உணவுப் பாத்திரத்தை கழுவுவது போன்ற வேலைகளை அம்மா அல்லது அப்பா அவர்களுடன் சேர்ந்து செய்யலாம். மிக முக்கியமாக, பள்ளிகளில் அவர்களுக்கு இருக்கும் கால அட்டவணையைப் போன்று, இக்காலக்கட்டத்தில் வீட்டிலும் பிள்ளைகளுக்கு ஓர் அட்டவணையை பெற்றோர் தயார் செய்து, அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவது சிறப்பாக இருக்கும்” என தெரிவித்தார்.

சுமார் 20 ஆண்டுகளாக இப்பள்ளியை நடத்தி வரும் ரீத்தா, குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மதியிறுக்கக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவ இப்பள்ளி தொடங்கப்பட்டு, அதன் சேவை இன்றளவும் நீடிப்பதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தலைநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி தங்கவேலு ராகா செய்தியிடம் பேசினார்.

ராஜேஸ்வரி தங்கவேலு

இரு AUTISM பிள்ளைகள் மற்றும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிள்ளை என மூன்றுப் பிள்ளைகளுக்கு தாயான இவர் கூறிய போது...

“பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு Fun Sensory Activities அடிப்படையில் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது, தட்டில் அரிசி அல்லது தானிய வகைகளை சிறிதளவு கொட்டில் அதன் மீது பிள்ளைகளின் விரல்களைப் பிடித்து, எழுத்துக்கள் எழுத கற்றுத் தரலாம். அல்லது பலூன் மீது வர்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையச் சொல்லலாம்” என்றார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக AUTISM விழிப்புணர்வு தினத்தை ஒட்டி அம்மூவரும் ராகா செய்திடம் இக்கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather