Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

10 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணிக்க முடியும்!

Apr 02, 2020


COVID-19: ஒரே நாளில் நூற்றுக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்!

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும், Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 108 பேர் முழுமையாக குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 645 ஆக அதிகரித்துள்ளது.

அவ்வெண்ணிக்கை, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த சம்பவங்களில் இருந்து 22 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

இதனிடையே, முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலாக்கம் நல்ல பலனைக் காட்டத் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்  துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

சுகாதாரத்  துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah

ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அக்காலக்கட்டத்தில் பதிவான Covid-19 சம்பவங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே அதற்கு காரணம் என்றாரவர்.

இருந்த போதிலும், அந்நிலவரத்தை அடிப்படையாக வைத்து கொரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மெத்தனமாக இருந்து விட முடியாது என்றும் Datuk Dr Noor Hisham Abdullah எச்சரித்தார்.

நேற்று முதல் அமுலுக்கு வந்த 2ஆம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அனைவரும் தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியமாவதாக அவர் வலியுறுத்தினார்.

10 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணிக்க முடியும்!

இந்த 2ஆம் கட்ட உத்தரவின் கீழ், ஒருவர் தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்  என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உணவு, மருந்து உள்ளிட்ட எந்த அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, இக்கட்டுப்பாட்டை மீறுவோருக்கு ஆயிரம் ரிங்கிட்டு அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather