← Back to list
மேலும் 142 சம்பவங்கள்!
Apr 01, 2020
நாட்டில் மேலும் 142 Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனை அடுத்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்து தொளாயிரத்து எட்டாக அதிகரித்துள்ளது.
புதிதாக இரண்டு மரணங்கள் பதிவாகி மொத்த மரண எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் Covid-19 பரவல் தணிவதற்கான தொடக்கக் கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆயினும் அது வரும் இரு வார காலத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ளும் விதத்தையே பொருத்திருக்கும்.
வீட்டிலேயே தொடர்ந்து இருந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் வரை சில முக்கிய வரிகளுக்கான பாரங்களை அனுப்புவதைத் தாமப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
BE வருமான வரி பாரமும் அவற்றில் அடங்கும்.
அப்பாரத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 30 ஆம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வர்த்தக உரிமையாளர்கள் தங்களது வரி பாரங்களை அனுப்புவதற்கான கால அவகாசமும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டை ஆணையையொட்டிய சாலைத் தடுப்பின் போது காவல் வீரர்களின் ஆதாரமாகக் காட்டுவதற்கு மின்சாரம் அல்லது தண்ணீர் கட்டண ரசீதுகளைக் கொண்டுச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் போது சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பதை உறுதிச் செய்யவே அந்த வேண்டுகோள் என சிலாங்கூர், PJ காவல் துறை கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather