← Back to list
இனி எல்லாம் உங்கள் கையில்!
Apr 01, 2020
இன்று, 2ஆம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் முதல் நாள்!
இந்நிலையில், கொரோனா நோய் சங்கிலியாக தொடர்ந்து பரவுவதை நிறுத்துவதில் மலேசியா வெற்றிக் காணுமா இல்லையா என்பது, அடுத்து வரக்கூடிய 14 நாட்களைப் பொறுத்து தான் இருக்கிறது என சுகாதார துறை தலைமை இயக்குநர் கூறுகின்றார்.
எதிர்பார்த்த பலனை அடைய, மக்களின் ஒத்துழைப்பு ஒன்றே மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.
முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலாக்கத்தின் புள்ளி விவரப்படி, நாள்தோறும் நாட்டில் Covid-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததை அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அதே சமயம், அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதை காண முடிவதாக Dr Noor Hisham சொன்னார்.
இதுவரையிலான நிலவரப்படி, ஒரே நாளில் ஏறக்குறைய 91 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் பேசிய அவர், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், அப்பழக்கத்தை கைவிட இக்காலக்கட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்க அதிக வாய்ப்புள்ள இரு வயதுப் பிரிவினரை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.
ஒன்று 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்; மற்றொன்று 56 முதல் 60 வயதினர் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
அதில் முதல் வயது பிரிவினர் (26 முதல் 30), மாணவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்பியவர்களாக இருக்கலாம்;
அல்லது, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலில் இருப்பது தெரிந்தும், அதனை மீறி எப்பொழுதும் போல சகஜமாக வீட்டை விட்டு வெளியேறி வருபவர்களாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக Dr Noor Hisham சொன்னார்.
இரண்டாவது வயது பிரிவினர் (56 முதல் 60), வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியேறுபவர்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.
இவ்வேளையில், பொது இடங்களில் கிருமி நாசினி பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டி முறையையும் அமைச்சு விரைவில் அறிவிக்கும் என Dr Noor Hisham தெரிவித்தார்.
அப்பணிகளில் இறங்கியுள்ள சில அதிகாரிகள், முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரிய வந்துள்ளதே அதற்கு காரணம் என்றாரவர்.
கொரோனா வைரஸ் பரவலை கையாள, கடுமையாக்கப்பட்ட விதிமுறைகளுடன் 2ஆம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்று தொடங்கியுள்ளது.
மேலும் சில செய்திகள்.....
பொய்த் தகவல்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக வங்காளதேச இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கபட்டதாக கூறி பகிரப்பட்டு வரும் புகைப்படம் மற்றும் குரல் பதிவுகளை, மலேசிய ராணுவப் படை மறுத்துள்ளது.
அது பொய்யான தகவல் என கூறிய ராணுவப் படைத் தளபதி, அத்தகவலை பகிரும் நபர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கடந்தாண்டு ஜூலையில் வங்களாதேச அரசுக்குச் சொந்தமான முகநூல் பக்கத்தில் வெளியான பழைய புகைப்படம் அது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள SEBENARNYA.MY அகப்பக்கத்தை வலம் வரலாம்.
அரை மணி நேரத்தில் முடிவு!
அரை மணி நேரத்தில் COVID-19 நோயை அடையாளம் காணும் கருவிப் பயன்பாடு குறித்து மலேசியா, அமெரிக்காவுடன் கலந்துப் பேசி வருகின்றது.
உண்மையில் அப்பொருள் பினாங்கிலுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது;
எனினும், அத்தொழிற்சாலைக்கு அமெரிக்காவுடன் நேரடி ஒப்பந்தம் இருப்பதால் அதன் தொடர்பில் முதலில் அந்நாட்டிடம் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather