← Back to list
Covid-19 : தன்னார்வலரின் பயணம்!
Mar 31, 2020
கொரோனா வைரஸ் சங்கிலியாக பரவுவதை தடுக்க போராடி வரும் பல நூறு மருத்துவப் பணியாளர்களுடன், தன்னார்வ ஊழியர்களும் கரம் கோர்த்துள்ளனர்.
காந்தரூபன் சுப்ரமணியம்
அவர்களில் ஒருவர் தான், செலாயாங் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக சேர்ந்துள்ள மலேசிய செம்பிறைச் சங்கத்தின், சிலாங்கூர் மாநில உறுப்பினர் காந்தரூபன் சுப்ரமணியம்.
இக்காலக்கட்டத்தில் மருத்துவமனையில், தங்களது குழு மேற்கொண்டு வரும் பணிகளில், கிருமிகள் அதிகம் பரவக்கூடிய இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதும் ஒன்று என அவர் கூறினார்.
இதனிடையே, மருத்துவமனைகளில் Covid-19 நோய்ப் பரவலை கையாளும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் காந்தரூபன் பேசினார்.
Personal Protective Equipment (PP) எனப்படும் சுய பாதுகாப்பு கவசம் அணிவதே மருத்துவப் பணியாளர்களுக்கும் தங்களை போன்ற தன்னார்வலர்களுக்கும் மிக பெரிய சவால் என அவர் குறிப்பிட்டார்.
அதிக நேரம் அதனை அணிந்தால் வெப்பத்தை அனுபவிப்பதோடு, பணி நேரம் முழுக்க ஓர் இறுக்கமான சூழ்நிலை ஏற்படும் என தெரிந்தும், மருத்துவப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் மக்கள் குறிப்பாக கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களின் நலன் கருதி, மிகவும் அர்ப்பணிப்புடன் தங்களது கடமையில் ஈடுப்பட்டு வருவதை காண முடிவதாகவும் காந்தரூபன் கூறினார்.
எனவே, வைரஸ் பரவலை தடுக்கவும், அக்கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கவும் போராடி வரும் அனைத்து நிலையிலான மருத்துவப் பணியாளர்களின் இப்படிப்பட்ட அயராத அர்ப்பணிப்பு கருதி, பொது மக்கள் அரசாங்கம் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அவல் வலியுறுத்தினார்.
நேற்றைய நிலவரப்படி, பல்வேறு மருத்துவத் துறைப் பின்னணியைக் கொண்ட ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் தங்களுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடும் தன்னார்வலராக சேர விரும்பும் மருத்துவப் பணியாளார்களையும் அமைச்சு வரவேற்கின்றது.
அல்லது தன்னார்வலர் பணி குறித்த விவரங்களை, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையப் பிணைப்புகள் வாயிலாக காந்தரூபனிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
https://www.facebook.com/bsmmhululangat/
https://www.instagram.com/mrcsdhl/?igshid=ut2b65hgbepe
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather