← Back to list
பதற்றம் வேண்டாம்!
Mar 30, 2020
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு தேவையான அளவில் இருக்கின்றது.
எனவே, பொது மக்கள் அது குறித்து பதற்றமடைய வேண்டாம் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம், அரசாங்கத்தின் ஆலோசனைக்கு ஏற்ப பேரங்காடிகளில் மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்குவதையும் பார்க்க முடிவதாக, Tan Sri Muhyiddin Yassin தமது Twitter-ரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தலைநகரில் உள்ள பேரங்காடிக்கு நேரில் சென்ற Tan Sri Muhyiddin பொருட்கள் வாங்கியதோடு, நிலவரத்தையும் நேரில் பார்வையிட்டார்.
இவ்வேளையில், தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob-பும் நாட்டில் உணவுப் பொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
எனவே முண்டியடித்துக் கொண்டு பேரங்காடிகளில் யாரும் பொருட்கள் வாங்க வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை அறிவுறுத்தினார்.
பொருட்கள் கையிருப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரை நாட்டிலுள்ள 27 பேரங்காடிகளில் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், உணவுப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரிசி கையிருப்பு போதுமானதாக இருக்கின்றது என அரசாங்கம் கூறுவது மொத்தமாக எல்லா வகை அரிசையையும் சேர்த்து தான்; மாறாக குறிப்பிட்ட ஒரு முத்திரயை அல்ல என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather