Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வங்கிக் கடன் ஒத்தி வைப்பு: கேள்வி – பதில்!

Mar 27, 2020


Covid-19 நோய்ப் பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படிருப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் பற்று அட்டை கடன் தவிர்த்து, மற்ற எல்லா வகை கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க Bank Negara அனுமதி வழங்கியுள்ளது.

தனிநபர், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் மற்றும் நிறுவனங்களை உட்படுத்திய இச்சலுகை குறித்து, பொதுவில் எழும் கேள்விகளும் - அதற்கான பதில்களும்:

1. கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைப்பது என்றால் என்ன?

இந்த சலுகையானது,  கடன்களை திருப்பிச் செலுத்துவதை  தற்காலிகமாக நிறுத்த அல்லது ஒத்தி வைக்க வாய்ப்பு வழங்குகிறது. கடன்களுக்கான அசல் மற்றும் வட்டித் தொகையையும் இது உட்படுத்தியிருக்கிறது.

2. இதன் நோக்கம்?

Covid-19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிக நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தனிநபர், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்கு உதவுது இதன் நோக்கமாகும். அறிவிக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம் முடிந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் வங்கிக் கடனை வழக்கம் போல் திருப்பிச் செலுத்தலாம்.

3. யாருக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது?

கடன் பற்று அட்டைக்கான கடனை தவிர்த்து, இதர தனிநபர், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகை இயல்பாக வழங்கப்படும். எனினும், சில நிபந்தனைகள் உண்டு:

•            ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று, அக்கடன் 90 நாட்களுக்கும் மேலும் நிலுவையில் இருக்கக்கூடாது.

•            அக்கடன் மலேசிய ரிங்கிட்டில் இருக்க வேண்டும்.

அதே சமயம், நிறுவனங்களுக்காக / தனிநபர் கடன் பெற்றவர்கள் அக்கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான தடைக்கு அந்தந்த வங்கிகளிடம் விண்ணப்பிக்கலாம்.

4. இச்சலுகையை ஆறு மாதங்களுக்கும் மேல் நீட்டிக்க முடியுமா?

வங்கி கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் இச்சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒருவேளை, அந்த அவகாசத்தை நீட்டிக்கும் தேவை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வங்கியின் ஆலோசனையைப் பெறலாம்.

5. கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைப்பதால், ஒருவருடைய CCRIS பதிவு பாதிக்குமா?

இல்லை. ஒத்தி வைக்கப்படும் கடன் தொகைக்கான அசல் மற்றும் வட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாடிக்கையாளார்கள் அதனையும் சேர்த்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.

6. இச்சலுகைகைக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமா?

இல்லை. கடன் பற்று அட்டைக்கான கடன் தவிர்த்து, நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனைத்து தனிநபர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை PKS-சுக்கான கடனை திருப்பிச் செலுத்துவது இயல்பாகவே ஒத்தி வைக்கப்படும்.

7. ஏற்கனவே இருக்கும் கடன் தொகையை திருப்பிச் செலுத்த தவறியவர்கள், இச்சலுகைக்கு விண்ணப்பிக்கலாமா?

90 நாட்களுக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தாமல், நிலுவைத் தொகையை கொண்டிருப்போர், கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க முடியாது. இதன் தொடர்பில், வாடிக்கையாளார்கள் தங்களது வங்கியின் உதவியை நாடலாம்.

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin 

8. வங்கிக் கடனை மறு அட்டவணை மற்றும் மறு சீரமைப்பு செய்யும் திட்டம் (R & R)-ரின் கீழ் உள்ளவர்களுக்கு இச்சலுகை கிடைக்குமா

மறு அட்டவணை மற்றும் மறு சீரமைப்பு திட்டம் (R & R)-ரின் கீழ் உள்ளவர்கள் இச்சலுகையைப் பெற தகுதியானவர்கள்; எனினும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

9.கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் இச்சலுகை எந்த வங்கியில் கிடைக்கும்?

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகள், உரிமம் பெற்ற இஸ்லாமிய வங்கி மற்றும் Bank Negara Malaysia-வின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிதி மேம்பாட்டு கழகம் (IKP) ஆகியவற்றில் இச்சலுகை வழங்கப்படுகிறது. 

இச்சலுகையைப் பெற தகுதியான வாடிக்கையாளர்கள் இயல்பாகவே பயனடையலாம்.

10. கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் இச்சலுகையின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கி தனது வாடிக்கையாளாரை பதிந்திருக்கின்றதா என்பதை எப்படி அறிந்துக் கொள்வதுஇச்சலுகைக்கு ஒருவர் தகுதியானவரா என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

இச்சலுகையைப் பெற தகுதியானவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிதிக் கழகம்/ வங்கி போதுமான தகவல்களை வழங்கும்.

அது பொது அறிவிப்பாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலோ வெளியிடப்படலாம்.

11. வங்கியிடம் வாங்கிய கடனை வழக்கம் போல் திருப்பிச் செலுத்த விரும்பும் ஒருவர், இச்சலுகையின் கீழ் இயல்பாகவே தகுதிப் பெறுவதை எப்படி தவிர்ப்பது?

இதன் தொடர்பில் சம்பந்தபட்டவர்கள் தங்களது வங்கியை நேரடியாக தொடர்புக் கொண்டு பேசலாம்.  

12. Covid-19 நிலவரத்தால், சிறுதொழில் நடத்துநர் ஒருவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, தனது கார் மற்றும் தனிநபர் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில், அவருக்கு இச்சலுகை கிடைக்குமா?

ஆம் கிடைக்கும். எனினும், ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று, சம்பந்தப்பட்டவர் 90 நாட்களுக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தாமல் நிலுவைத் தொகையை கொண்டிருக்கக்கூடாது.

13. ஆறு மாதங்கள் அவகாசம் முடிந்ததும், மாதந்தோறும் திருப்பிச் செலுத்தப்படும் தொகை அதிகரிக்குமா அல்லது கடனை திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரிக்கப்படுமா?

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்புடைய திட்டம் பற்றி கலந்தாலோசிக்க வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியை தொடர்புக் கொள்ளலாம்.

14. இப்போது தான் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அமுலுக்கு வந்த வங்கிக் கடனுக்கும் இச்சலுகை பொருந்துமா?

ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை முழுமையாக திருப்பிச் செலுத்தப்படமால் இருக்கும் அனைத்து கடன்களுக்கும் (கடன் பற்று அட்டை தவிர்த்து) இச்சலுகை பொருந்தும்.

15.  வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க இச்சலுகையை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களுக்கு, அதே வங்கியில் இருந்து புதிய கடன் கிடைக்குமா?

ஆம். ஆனால், அதன் இறுதி முடிவு அந்தந்த வங்கிகளின் அடிப்படை கொள்கையைப் பொருத்ததாகும்.

16. மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வதன் வாயிலாக வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தி வரும் ஒருவர் இச்சலுக்கைக்கு விண்ணப்பிக்கலாமா?

ஆம். அவ்வாறு வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க விரும்பும் வாடிக்கையாளர், சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் முறையை தற்காலிகமாக நிறுத்துமாறு தனது நிறுவனத்திடம்  கேட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அத்தகவலை வங்கியிடமும் தெரிவிக்க வேண்டும்.

பின்குறிப்பு:

இச்சலுகை குறித்து சந்தேகம் இருந்தால், வாடிக்கையாளார்கள் நேரடியாக தங்களது வங்கியை தொடர்புக் கொள்ளலாம்.

அல்லது மேல் விவரங்கள் பெற Bank Negara-வின் https://www.bnm.gov.my/documents/2020/FAQ_Essential%20Financial%20Services%20MCO_BM.pdf  என்ற அகப்பக்கம் அல்லது 1-300-88-5465 எண்கள் வாயிலாக TELELINK-கை தொடர்புக் கொள்ளலாம்.

(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

(இது Bank Negara-வின் தகவல்)


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather