Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது!

Mar 25, 2020


Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அதனை அறிவித்தார்.

முன்னதாக நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு இம்மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில் அரசாங்கம் புதிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

அது விவசாயிகள், கால் நடை வளர்ப்போர், அங்காடி வியாபாரிகள், டெக்சி ஓட்டுனர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உட்படுத்தியதாக இருக்கும் என பிரதமர் கூறினார்.

நாட்டில் Covid-19னால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

அதோடு 172 புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டு  மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.

புதிய சம்பவங்களில் 73 சுகாதாரப் பணியாளர்களை உட்படுத்தியது.

இதுவரை 199 பேர் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் போதுமான அளவில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு இருக்கிறது.

எனவே பொதுமக்கள் பதற்றமடைந்து அளவுக்கு அதிகமாகப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்தது.

இணையம் வழி சுவாசக் கவசங்களை வாங்கும் போது மிகக் கவனமாக இருக்குமாறு அரச மலேசிய காவல் துறை பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

பணப் பட்டுவாடா செய்யும் முன் வங்கிக் கணக்கு எண்ணை 'Check Scammer CCID' அல்லது 'semakmule' இணையத்தளத்தில் சரி பார்த்துக் கொள்ளுமாறு PDRM கேட்டுக் கொண்டுள்ளது.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather