← Back to list
Covid-19 : பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
Mar 23, 2020
நாட்டில் Covid-19னுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக நான்கு மரணங்கள் பதிவாகின.
இன்று 212 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 1,518 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 159 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் Covid-19 பரவல் காணப்படும் நிலையில் அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் சில திட்டங்களை அறிவித்துள்ளது.
அவ்வகையில், 55 வயதுக்குக் கீழ்பட்ட ஊழியர் சேமநிதி சந்தாதாரர்கள் தங்களது இரண்டாவது கணக்கில் உள்ள தொகையை மாதம் 500 ரிங்கிட் என 12 மாதங்களுக்கு மீட்கலாம்.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அதற்கு விண்ணப்பிக்கலாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறினார்.
தேசிய உயர்க்கல்விக் கழகம் PTPTNனிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதை 3 மாதங்கள் வரை ஒத்தி வைக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Covid-19 பரவலால் கடனுதவி பெற்றவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுகிறது.
Covid-19 தாக்கத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சுகாதார அமைச்சுக்குக் கூடுதலாக 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்குகிறது.
அதே சமயம் ஒப்பந்த அடிப்படையில் புதிய ஈராயிரம் மருத்துவப் பணியாளர்களை பணியில் அமர்த்த 10 கோடி ரிங்கிட் அங்கீகரிக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நெடுகிலும் பொது பேருந்துகள் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
ஆயினும் taxiகள், e-hailing சேவை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
நாளை முதல் Rapid KLலின் LRT, MRT, Monorel மற்றும் பேருந்து சேவைகள் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படவிருக்கின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather