← Back to list
ராணுவ படை தாக்குதலா? பொய் தகவல்!
Mar 22, 2020
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை பின்பற்றாதவர்களை ராணுவ படையினர் தாக்க முடியும் என்ற தகவலில் உண்மையில்லை!
இது குறித்த குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை அடுத்து, மலேசிய ஆயுத படை தளபது அவ்வாறு தெளிவுபடுத்தினார்.
எனவே இது போல சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்த் தகவல்களை நம்பி பீதி அடைய வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பொது மக்கள் அனைவரும் பின்பற்றுவதை உறுதிச் செய்ய, இன்று தொடங்கி காவல் துறைக்கு உதவியாக ராணுவப் படையும் களத்தில் இறங்குகின்றது.
_________
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு நாட்டிலுள்ள எல்லா வங்குகளிலும் பணப்பட்டுவாடா இயந்திரங்களும், cash, cheque மற்றும் coin deposit இயந்திரங்களும் காலை மணி 7 முதல் இரவு 10 வரை மட்டுமே திரந்திருக்கும்.
எனினும் இணைய பறிவர்த்தனைகள் எல்லா நேரமும் சேவையில் இருக்கும் என Bank Negara தெரிவித்துள்ளது.
___________
மற்றொரு நிலவரத்தில், இன்று தொடங்கி சிலாங்கூரைச் சேர்ந்த எல்லா 24 மணி நேரக் கடைகளும், உணவகங்களும் நள்ளிரவு தொடங்கி காலை 6மணி வரை மூடப்படும்.
சந்தைகள் காலை 5 மணி தொடங்கி மாலை 6 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவதாக அதன் மந்திரி பெசார் தெரிவித்தார்.
___________
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather