Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நிர்பயா வழக்கு: நீதி வென்றது!

Mar 20, 2020


2012ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலகை மக்களையே உறைய வைத்த நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் இன்று காலை டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த அந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் பதின்ம வயது சிறுவன் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானான்.

மேலும் ஒரு குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டான்.

இந்நிலையில், எஞ்சியிருந்த 4 குற்றவாளிகள் ஏற்கனவே 3 முறை மேல்முறையீடு செய்து தூக்கு தண்டனையை ஒத்தி வைத்து வந்த நிலையில்,  4ஆவது முறையாக நேற்றிரவு அவர்கள் மனு அனுப்பினர்.

இதையடுத்து நேற்று பின்னிரவு இரண்டரை மணி தொடங்கி ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த செவிமடுப்பின் போது, டெல்லி உயர்நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை நிலைநிறுத்தியது.

இதையடுத்து அதிகாலை மூன்றரை மணிக்கு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  சிறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அந்நால்வரும், இந்திய நேரப்படி அதிகாலை ஐந்தரை மணிக்கு தூக்கிலடப்பட்டனர்.

மருத்துவ மாணவியான 23 வயது நிர்பயா, 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் சுமார் ஒரு மணி நேரம் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுமோசமாக காயமடைந்தார்.

இதையடுத்து கூயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வேளையில், திகார் சிறையில் தூக்கிலிடப்பட்ட அந்த நான்கு குற்றவாளிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.

ஆஷா தேவி:

“நீதி தள்ளிப் போனது; ஆனால் தப்பவில்லை; ஏழு ஆண்டுகள் கழித்து என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது; இன்றைய நாளை உலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் நான் சமர்பிக்கின்றேன். தூக்கு தண்டனை நிறைவேறியதும் நான் என் மகளின் நிழல்படத்தை (புகைப்படத்தை) கட்டிப் பிடித்தேன்” என கண்கலங்க கூறியிருக்கின்றார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.

இதனிடையே, தனது மகளுக்கு நீதிக் கிடைத்த இந்த நாள் “நிர்பயா நீதி நாள்” அனுசரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திகார் சிறைக்கு வெளியே கொண்டாட்டம்:

அதிகாலையில் டெல்லி திகார் சிறைக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள், அந்த நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டதும் தேசிய கொடிகளை ஏந்தியும் இனிப்புகள் வழங்கியும் ஆரவாரம் செய்து கொண்டாடினர். “நிர்பயா நீடுழி வாழ்க” என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

புகைப்படம் : thenewsminute.com & indiatimes.com


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather