← Back to list
ஒரே முழு அமைச்சர்!
Mar 10, 2020
நாட்டின் புதிய அமைச்சரவையில் இந்திய சமூகத்திற்கு இரு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்று முழு அமைச்சர் பதவி; மற்றொன்று துணை அமைச்சர் பதவியாகும்.
Tapah நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசிய துணைத் தலைவருமான Datuk Seri M. Saravanan மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளர்.
ஜொகூர் Segamat நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Dr Santhara Kumar, கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
முந்தைய Pakatan Harapan அரசாங்கத்தில், 4 இந்தியர்கள் முழு அமைச்சர்களாக இருந்த வேளை, ஒருவர் துணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
Perikata Nasional-லின் மற்றொரு உறுப்புக் கட்சியான மசீசாவுக்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பதவியும், மூன்று துணை அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அமைச்சரவையின் சில முக்கிய அம்சங்கள்:
- துணைப் பிரதமர் இல்லை.
- நான்கு மூத்த அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
- இம்முறை ஆக அதிகமான அமைச்சர்கள் Johor-ரைச் சேர்ந்தவர்கள்.
- Datuk Seri Hishammuddin Hussein, Khairy Jamaluddin போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் திரும்பியிருக்கின்றனர்.
- ஐந்து பெண்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
- அமைச்சர் அல்லாத இருவருக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன; அதில் ஒன்று நிதியமைச்சர் பதவி.
Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான இப்புதிய அமைச்சரவையைச் சேர்ந்த ஆறு பேர் இன்று காலை செனட்டரகளாக பதவியேற்கின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather