← Back to list
மனம் இருந்தால் மரணத்தையும் வெல்லலாம்!
Mar 06, 2020
மனம் இருந்தால் மரணத்தையும் வெல்லலாம்!
அதனை நிரூபித்திருக்கிறார் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அனுஜா செல்வராஜ்.
மனதளவில் மட்டும் அல்ல, உடலளவிலும் பெண் என்பவள் வலிமைப் படைத்தவள் என்கிறார் அனுஜா.....
''என்னை பொருத்தவரை, தன்னம்பிக்கை என்பது தான் மிக முக்கியம், எந்த சூழ்நிலையிலும் சோர்வடைந்து விட கூடாது, நேர்மறையான சிந்தனை இருக்க வேண்டும், பிரச்னை வந்து விட்டதே என துவண்டு போகாமல், தினசரி வாழ்வை எவ்வாறு எதிர்கொள்கின்றோமோ அது போல இருந்தால், நிச்சயம் எந்த பிரச்னையிலிருந்தும் மீண்டு வரலாம்'', என அவர் சொன்னார்.
இது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, பொருளாதாரம், குடும்பம், வேலை என வாழ்க்கையின் எந்த சவாலை எதிர்கொண்டாலும், துணிந்து நின்று செயல்பட்டால் துன்பம் திரும்பிப் பார்க்காமல் ஓடும் என, தன்முனைப்புப் பேச்சாளருமான அனுஜா சொன்னார்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும், நம்மை வலிமைப்படுத்தும்.
அந்த சவாலை எதிர்த்து போராடி, அதிலிருந்து மீண்டும் வரும் பெண்களுக்கென்றே ஒரு தனி தைரியம் வரும் என்றும் ஆணித்தரமாகக் கூறினார் அனுஜா.
புற்றுநோயை எதிர்த்து போராடும் வாழ்வின் அந்த தருணத்தில் தாம் சந்தித்த சில விரும்பத்தகாத அனுபவங்கள் பற்றியும் அனுஜா ராகா செய்தி பிரிவிடம் பகிர்ந்து கொண்டார்.
''உணவு உண்ண கூட மனம் இருக்காது, உணவுகளைக் கண்டாலோ அப்படி ஒரு வெறுப்பு வரும், உடல் முழுவதும் புண் இருப்பது போல வலியாக இருக்கும், வாய்ப்புண், நகங்கள் பாதிப்பு என பல கஷ்டங்களைச் சந்தித்தேன், மனதளவில் என்னை மிகவும் வாட்டியெடுத்தன இந்த அனுபவங்கள், மனம் விட்டு அழுதிருக்கிறேன், ஆனால் அது ஒரு கட்டம் வரை மட்டுமே! அதன் பின் எனக்காகவும் எனது குடும்பம், பிள்ளைகளுக்காகவும் நான் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என எனக்கு நானே தைரியம் கூறிக் கொண்டேன்'', என்றாரவர்.
ஒரு தாயாகவும், மனைவியாகவும் தாம் சுமந்துள்ள பொறுப்புகள் தான், அந்த கொடிய நோயிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்தை தமக்குக் கொடுத்ததாகவும் அவர் சொன்னார்.
எனவே பெண்களே! மன உறுதி தான் ஒரு பெண்ணுக்கு அஸ்திவாரம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வானையும் தாண்டி விண்வெளியில் பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலகட்டத்தில், வாழ்க்கையே போராட்டம் என இருக்கும் பெண்களிடம் தாம் இதைத்தான் சொல்ல விரும்புவதாக அவர் கூறியதாவது,
பெண் என்றால் பிரச்னை இல்லாத வாழ்க்கை ஏது, எல்லா பெண்களுக்குமே வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எதாவது ஒரு துன்பம் வரும், சவாலைச் சந்திப்பீர்கள், ஆனால் அவற்றையெல்லாம் வென்று வருவது கண்டிப்பாக சாத்தியம்! ஐயோ பிரச்னை வந்து விட்டதே நான் என்ன செய்வேன் என வாடி போகாமல், அதற்கு இடம் கொடுக்காமல், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அதற்கான தீர்வை தேடுங்கள்! வரும் சவாலை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் அந்த '' Comeback'' நொடி தான், நம்மை உறுதியின் உச்சத்திற்குக் கொண்டுச் செல்லும்'' என அவர் கூறினார்.
தம்மை போலவே வாழ்க்கையில் சவால்களையும், இன்னல்களையும் சந்தித்து வரும் பெண்களுக்கு, ஜொகூரைச் சேர்ந்த அனுஜா ஒரு தன்முனைப்புப் பேச்சாளராகவும் இருந்து வருகின்றார்.
அனுஜாவின் வாழ்க்கை பயணத்தையே ஒரு முன்னோடியாக எடுத்துக் கொண்டு, வாழ்வோம் இனி தைரியமாக, நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம் நாம் பெண் என்று!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather