← Back to list
ஆசியாவின் பறக்கும் பாவை!
Mar 06, 2020
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு மன வலிமை மிக முக்கியம் என்கிறார் டத்தோ ம.ராஜாமணி.
ஆசியாவின் பறக்கும் பாவை என வர்ணிக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு ஜப்பான் Tokyo ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற முதல் மலேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே தாயை இழந்து, அன்றைய வறுமையான சூழ்நிலையில் தாம் பல இன்னல்களை சந்தித்த போதிலும், விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஓட்டப் பந்தயத் துறையில் தாம் காரணங்கள் கூறி ஒருநாளும் பின் வாங்கியதில்லை என்பதை குறிப்பிட்டார்.
1965-ஆம் ஆண்டு KL-லில் நடைபெற்ற SEAP அதாவது இப்போது SEA விளையாட்டு என்றழைக்கப்படும் போட்டியில் டத்தோ ம.ராஜாமணி, 4 தங்கப் பதக்கங்கள் வென்று, 4 சாதனைகளும் படைத்து அசத்தினார்.
கோலாலம்பூரில் அப்போட்டியில் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், இதர அமைச்சர்கள் முன்னிலையில், சொந்த அரங்கில் அப்போட்டியில் தாம் பங்கேற்ற போது, அரங்கில் கூடியிருந்த ஒட்டுமொத்த மலேசிய ரசிகர்களும் தனது பெயரைச் சொல்லி, தனக்கு ஊக்கம் கொடுத்த அந்த தருணம் இன்னும் நினைவில் பசுமையாக இருப்பதாக அவர் கூறினார்.
அப்போட்டியில் பங்கேற்ற அத்தருணமே வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தற்போது 77 வயதாகும் ராஜாமணி.
அன்றைய நாளில், தனக்கு ஊக்கமளித்து, ஓட்டப்பந்தய துறையில் தனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்த தனத தந்தை மற்றும் சுப்பையா எனும் தனது பயிற்றுநருக்கு இன்றும் தாம் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளதாக ராஜாமணி தெரிவித்தார்.
மலேசியாவில், சிறந்த தேசிய விளையாட்டு வீராங்கனைக்கான விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையும் இவரையேச் சாரும்.
IMAGE: thesportsmuseum
மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, டத்தோ ராஜாமணி தனது அனுபவங்களை ராகா செய்தியுடன் பகிர்ந்துக் கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather