← Back to list
"நான் அனைத்து மலேசியர்களுக்கான பிரதமர்" - Tan Sri Muhyiddin Yassin!
Mar 03, 2020
இனம், மதம், மொழி ஆகியவற்றை கடந்து, தாம் அனைத்து மலேசியர்களுக்கான பிரதமர் என உறுதியளித்திருக்கின்றார் Tan Sri Muhyiddin Yassin!
Perlis தொடங்கி சபா வரை, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, தாம் அனைத்து மலேசியர்களுக்கான பிரதமர் என Tan Sri Muhyiddin தமது முதல் உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய பிரதமர் என்ற முறையில் ஊழல் அற்ற அரசாங்கத்தை உருவாக்குவது தான் தமது முக்கிய இலக்கு என்றும் அவர் சொன்னார்.
நாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்றப் பின், நேற்றிரவு அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில், தூய்மையான, திறமையான, ஒருமைப்பாடு மிக்க அமைச்சரவையை அமைப்பதிலும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஒழிப்பதிலும் தமது கவனம் இருக்கும் என்றார்.
புதிய அரசாங்கத்தின் கீழ், நாட்டுக்கு எது தேவை என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்பட தமக்கு சற்று கால அவகாசம் தேவை என்றும் Tan Sri Muhyiddin மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.
மலேசியர்களின் அன்றாட தேவைகளில் நீடிக்கும் பிரச்சனைகளை களையப் போவதாக தெரிவித்த அவர், வாழ்க்கைச் செலவினம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் தாம் கவனம் செலுத்தப் போவதாக கூறினார்.
கடந்த ஒரு வாரமாக நீடித்த அரசியல் நெருக்கடிகளை சகித்துக் கொண்டு, பொறுமைக் காத்த ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather