Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நன்றி குமார்!

Feb 22, 2020


S. Kumar.....மலேசிய ஹாக்கி விளையாட்டுத் துறையில் மிகவும் பரீட்சயமான பெயர்களில் ஒன்று!

1999ஆம் ஆண்டு தனது ஹாக்கி விளையாட்டு பயணத்தை தொடக்கிய நெகிரி செம்பிலானைச் சேர்ந்த குமார், சுமார் 20 ஆண்டுகள் சேவைக்கு பிறகு, அனைத்துலக ஆட்டங்களில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அண்மையில் அறிவித்தார்.

தனது முடிவு ஹாக்கி விளையாட்டுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம் என்றாலும், 40 வயது வரை இத்துறையில் நீடித்ததை தாம் பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் குமார் தெரிவித்தார்.

தம்மை பொறுத்த வரை இது திடீர் முடிவல்ல எனக் கூறிய குமார், சில தவிர்க்க முடியாத சங்கடங்கள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக, 2015ஆம் ஆண்டே ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற தாம் எண்ணியதாக கூறினார்.

ஆனால், பின்னர் ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு, இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாட்டை தொடரலாம் என அப்போது முடிவெடுத்தாராம்.

அந்த காலக்கட்டத்தில் தனக்கு மிகவும் பக்கபலமாக இருந்த தந்தையின் மறைவு, அதற்கடுத்து தனது இரண்டரை வயது மகனின் மறைவு என அன்பான இருவரை அடுத்தடுத்து இழந்த அதிர்ச்சிகளில் இருந்து மீள தாம் மிகவும் சிரமப்பட்டதையும் குமார் நினைவுக்கூர்ந்தார்.

இதனிடையே, 2011ஆம் ஆண்டு ஆசியாவின் மிகச் சிறந்த வீரர் என்ற விருதை வென்ற அந்த தருணம் தான்,  ஹாக்கி விளையாட்டில் தம்மால் மறக்க முடியாத ஒன்று என்றும் குமார் குறிப்பிட்டார்.

வழக்கமாக, இந்தியா, பாகிஸ்தான், கொரியா ஆகிய நாடுகளே கைப்பற்றும் அந்த விருதை, கோல் காவலரான தாம் வென்றது மிக மிக மகிழ்ச்சியான தருணம் என்றும் குமார் கூறினார்.

இருந்த போதிலும், கடைசி வரை ஒலிம்பிக்கில் விளையாட முடியாமல் போனது இன்றளவும் மிகப் பெரிய வருத்தமாக இருப்பதாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு முறை வெள்ளிப் பதக்கங்களையும், ஆசிய கிண்ண ஹாக்கிப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ள குமார் தெரிவித்தார்.

இவ்வேளையில், அனைத்துலக ஆட்டங்களில் இருந்து ஓய்வுப் பெறுவதாக குமார் அறிவித்த கையோடு, அவர் உடனடியாக நாட்டின் இளையோர் ஹாக்கி அணி கோல் காவலர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

அப்பொறுப்பு குறித்துப் பேசிய குமார், அவ்வாய்ப்பை அளித்த மலேசிய ஹாக்கி சம்மேளனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ஹாக்கி விளையாட்டுத் துறையில் மேலும் அதிகமான ஹாக்கி கோல் காவலர்களை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் குமார் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பு, தனது அக்கனவை நிறைவேற்ற உதவும் என்றும் குமார் நம்புகிறார்.

மேலும் பேசிய குமார், ஒரு மனிதனை கட்டொழுங்கப்படுத்த உதவும் விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எனவே, எந்த விளையாட்டுத் துறையானாலும் சரி, இளைஞர்கள் தங்களது ஆர்வத்திற்கு ஏற்ப அதில் ஈடுபட முனைப்பு காட்ட வேண்டும் என்றாரவர்.

மார்ச் மாத தொடக்கத்தில், தேசிய இளையோர் அணியில் தனது கோல் காவலர் பயிற்றுநர் பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்றுநர் துறையில் குமார் இன்னும் அதிகமாக மிளிர நமது வாழ்த்துகள்!
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather