← Back to list
உலக தாய்மொழி தினம் !
Feb 21, 2020
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி நாட்டிலுள்ள தமிழ்பள்ளிகளில் பலவகையான தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான்.
ஆனால் இம்முறை சிலாங்கூரிலுள்ள சில தமிழ்ப்பள்ளிகள் அத்தகைய தமிழ் சார்ந்த போட்டிகள் தவிர்த்து சற்று வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றன.
குறிப்பாக காஜாங் தமிழ்ப்பள்ளியில் இம்முறை தாய்மொழி தினத்திற்கான சிறப்பு ஒட்டிகள் (stickers) தயாரிக்கப்பட்டுள்ளன.
காஜாங் தமிழ்ப்பள்ளி தயாரித்த சிறப்பு ஒட்டி
அந்த ஒட்டிகளை இந்த வாரம் முழுவதும் மாணவர்கள் தங்களது பள்ளி சீருடைகளில் ஒட்டிக் கொள்ள அப்பள்ளி ஊக்குவிக்கின்றது.
காஜாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
"அனைத்துலக தாய்மொழி நாள்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த ஒட்டிகள் வாயிலாக மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்ல மாறாக அவர்களது பெற்றோர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் இந்நாளின் சிறப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக காஜாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜோன் போஸ்கோ தெரிவித்தார்.
ஐக்கோம் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
இதனிடையே, ஷா அலாமிலுள்ள ஐக்கோம் தமிழ்ப்பள்ளியில் இம்முறை உலக தாய்மொழி தினத்தை ஒட்டிய கொண்டாட்டங்களில் சிறப்பம்சமாக திருவள்ளுவருக்கு ஈகம் செய்யப்படுகிறது.
அதனால் கொண்டாட்டங்களில் திருவள்ளுவரின் கருப்பொருளே அதிகமாக கையாளப்படும் என தமிழ்மொழி பணித்தியத் தலைவர், ஆசிரியை வனிதா கணபதி தெரிவித்தார்.
ஐக்கோம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேடைப் படைப்பு
உதாரணத்திற்கு, பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வருகையாளார்களுக்கு திருவள்ளுவர் தொடர்பான 'book mark' மற்றும் 'goodie bag' பைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழ் சான்றோர்களுக்கு ஈகம் செய்யவும் தங்களது பள்ளி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், உலு சிலாங்கூர் கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியில் முதன் முறையாக மாணவர்களுக்கு உலக தாய்மொழி தின அறிமுக விழா நடத்தபட்டதாக ஆசிரியர் சிவராஜா பெருமாள் தெரிவித்தார்.
கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
அந்த அறிமுக விழாவில், தமிழ்தாயாகவும், வள்ளுவராகவும், தமிழ்கடவுள் முருகராகவும், பாரதியாராகவும், ஒளவையாராகவும் மாணவர்களுக்கு வேடமிட்டு, இன்றைய தினத்தை பள்ளி தலைமையாசிரியர் இரா. வள்ளிக்கண்ணன் அவர்கள் தொடக்கி வைத்ததாகவும் அவர் சொன்னார்.
ஓலையை பலூனில் கட்டி பறக்க விடும் நிகழ்வு
ஓலையை பலூனில் கட்டி, பறக்க விட்டு இந்த அறிமுக விழா சற்று வித்தியாசமாக மேற்கொள்ளப்பட்டதாக ஆசிரியர் சிவராஜா தெரிவித்தார்.
வரலாற்றின் படி , 1952ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற மொழி உரிமைப் போராட்டத்தின் போது உயிர் நீத்த Dhaka பல்கலைக்கழக மாணவர்களின் நினைவாகவும், அழிந்து வரும் மொழிகளை காப்பற்றவும் UNESCO இன்றைய நாளை உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather