← Back to list
ஆழ்துளையில் மீளாத்துயில் கொண்ட சுஜித்!
Oct 29, 2019
தமிழகம் திருச்சியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 80 மணி நேரங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன!
ஐந்தாவது நாளான இன்று, அதிகாலை வாக்கில் சுஜித்தின் சடலத்தை பேரிடர் மீட்புப் படையினர் சிதிலடைந்த நிலையில் மீட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சுஜித்தின் உடல் உடற்கூறு ஆய்வுகளுக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆவாரம்பட்டியில் பாத்திமா புதூர் கல்லறையில் சுஜித்தின் உடலுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மழை, மண் சரிவு, பாறைகள் மற்றும் இயந்திரப் பழுது ஆகிய பல சவால்களையும் தாண்டி சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சுஜித் சுவாசிப்பதற்கு வசதியாக தொடர்ந்து பிராணவாயு அளிக்கப்பட்டு வந்தது; சுஜித் பயப்படாமல் இருக்க குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது.
எனினும், ஒவ்வொரு முயற்சியின் போதும் ஏற்பட்ட பின்னடைவுக் காரணமாக, சுஜித் சில அடிகள் கீழிறங்கியதால் 20 அடியில் இருந்த சுஜித் 82 அடிக்கும் கீழ் சென்று, மீட்புப் பணிகள் தொடர்ந்து சிக்கலடைந்தன.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோளவயலுக்கு மத்தியில் 600 அடி ஆழத்தில் அவனது தந்தையால் வெட்டப்பட்ட கிணறு என கூறப்படுகிறது.
எனினும், அது சரியாக மூடப்படாததால், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சுஜித் அதனுள் தவறி விழுந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
சுஜித்தின் மரணம் தமிழ்நாடு மட்டும் இன்றி, உலக தமிழர்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனிடையே, சுஜித் விழுந்த அந்த ஆழ்துளை கிணறும், சுஜித்தை மீட்பதற்காக அதனருகே தோண்டப்பட்ட குழியும் சிமெண்ட் கலவைகளால் மூடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து, அவற்றை மூடும் பணி மேற்கொள்ளப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather